ஆப் ஸ்டோரில் புதிய கட்டுப்பாடுகளை விதித்த Google நிறுவனம்..!! காரணம் என்ன..??
சிங்கப்பூரில் செயலிகளைப் பதிவிறக்கம் செய்யும் ஆப் ஸ்டோரில் (App Store) புதிய கட்டுப்பாடுகளானது ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
கைப்பேசியில் உள்ள ஆப்ஸ் ஸ்டோர்ஸ் அமைப்பிலிருந்து செயலிகளைப் பதிவிறக்கம் செய்வதற்கு இனி முக அடையாளச் சோதனை, கடன் அட்டை பயன்பாடு மற்றும் அரசாங்க அடையாளச் சோதனை போன்றவைப் பயன்படுத்த வேண்டும் என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
18 வயதிற்கு கீழ் உள்ளோர் பாலியல் உள்ளடக்கம் (content ) போன்ற தேவையில்லாத செயலிகளைப் பதிவிறக்கம் செய்வதை தடுப்பதற்காக ஆப் ஸ்டோரின் கட்டமைப்புகளில் புதிய வழிமுறைகளை அறிமுகம் செய்யுமாறு தகவல், தொடர்பு மேம்பாட்டு ஆணையம் அறிவித்திருந்தது.
தகவல், தொடர்பு மேம்பாட்டு ஆணையத்தின் அறிவிப்பின்படி, ஆப் ஸ்டோரின் கட்டமைப்புகள் அரசாங்கம் வழங்கும் அடையாள ஆவணங்களை சரி பார்க்கும் வகையிலும் அல்லது பதிவிறக்கம் செய்வோரின் முக அடையாளத்தை இணையத் தரவுகளில் சரிபார்க்கும் வகையிலும் அமைக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
Apple, Google, Huawei, Samsung, Microsoft போன்ற நிறுவனங்களிலும் இந்த ஆப்ஸ் ஸ்டோரின் புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
கூகுள் (Google) நிறுவனமானது கடந்த ஆண்டு (2025) அக்டோபர் மாதத்தில் பயனாளர்களின் வயதை உறுதி செய்யும் திட்டங்களை அறிமுகம் செய்தது.மேலும் பயனாளர்கள் கூகுளில் தேடும் உள்ளடக்கங்களை (content ) கண்காணித்து வருவதாகவும் கூறியது.
மார்ச் 31ஆம் தேதிக்குள் நிறுவனத்தின் அனைத்து பயனாளர்களுக்கும் வயது உறுதி செய்யும் திட்டமானது அறிமுகப்படுத்தப்படும் என்றும் google நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
கூகுள் கணக்கைப் பயன்படுத்தும் 18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் காணொளிகளைப் பார்க்கும் பொழுது , ஓய்வெடுத்துக்கொள்ளும்படி தகவல் அனுப்பப்பட உள்ளதாக யூடியூப் தளமும் முடிவெடுத்துள்ளது..
Google Search – இல் இனி 18 வயதிற்கு கீழ் உள்ளோர் பாலியல் மற்றும் வன்முறை சார்ந்த உள்ளடக்கங்களைக் (content) காண முடியாது எனவும் google நிறுவனம் கூறியுள்ளது.
மேலும் ஜெமினையைப் (Gemini) பயன்படுத்தி செயற்கை நுண்ணறிவின் (artificial intelligence) துணையுடன் தேவையற்ற படங்களை உருவாக்குவதைத் தடுக்கும் வகையிலும் இந்த புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
Samsung கேலக்ஸி ஸ்டோரைப் (galaxy Store) பயன்படுத்துவதற்கு பயனாளர்களின் கடன் அட்டைகளின் விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது.