சிங்கப்பூரில் பணிநீக்கம் செய்யப்பட்ட கிராப் ஓட்டுநர்..!!

சிங்கப்பூரில் பணிநீக்கம் செய்யப்பட்ட கிராப் ஓட்டுநர்..!!

சிங்கப்பூரில் ஒரு இணையவாசி வேலையிலிருந்து வீட்டிற்கு கிராப் மூலமாக பயணம் செய்தபோது நடந்த ஒரு விசித்திரமான சம்பவம் குறித்து சுட்டிக்காட்டி இருந்தார். இந்த வீடியோ பதிவு முன்பாகவே sgfollowsall என்ற சமூக ஊடாக பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

ஓட்டுனர் வாகனம் ஓட்டிக் கொண்டிருக்கும்போதே கவனம் சிதறியவாறு கார் கதவுக்கு அருகே தனது வலது காலுக்கு அருகில் இருந்த ஏதோ ஒன்றை கூர்ந்து கவனித்து கொண்டு வந்ததாகவும் மெல்லிய முனைகள் ஒலிகளை எழுப்பிக் கொண்டும் கார் ஓட்டியுள்ளார்.

காரில் பயணம் செய்த நபர் ஓட்டுனரின் தோழிக்கு மேல் எட்டிப்பார்க்க முடிவு செய்த அவரது வலது முழங்காலுக்கு அருகில் ஒரு கூடுதல் செல்போன் இருந்ததை கண்டுள்ளதாகவும், அதில் ஜப்பானிய ஆபாச படமானது ஓடிக்கொண்டிருந்தது தெரியவந்தது என இணையவாசி பதிவிட்டுள்ளார்.

மேலும் அந்த காணொளி பதிவில் ஓட்டுநர் தொடர்ந்து அவரது கைபேசியை பார்த்துக் கொண்டிருப்பதால் கார் பக்கவாட்டில் அங்கும் இங்குமாக அலைமோதியது. இது மிகவும் ஆபத்தானதாக தெரிகிறது எனவும் பதிவிட்டு இருந்தார்.

மேலும் கிராப் நிறுவனத்திடம் இந்த வீடியோ குறித்த பதிவை பயணம் செய்த பயணி புகார் அளித்துள்ளார்.

இதனை அடுத்து பாதுகாப்பு குறித்த கவலைகள் காரணமாக ஓட்டுநருடைய கணக்கு முடக்கப்பட்டு அவரை தற்காலிகமாக பணி நீக்கம் செய்துள்ளதாகவும் கிராப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் பாதுகாப்பே எங்களின் முதல் உரிமை, மேலும் இந்த சம்பவம் குறித்து நாங்கள் விசாரணை நடத்தி வருவதாகவும் கிராப் நிறுவனமானது தெரிவித்துள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK