தென்கொரியாவில் பயங்கர தீ விபத்து..!! சம்பவ இடத்திலேயே 2 பேர் பலி..!!
தென்கொரியாவின் கியோங்கி வட்டாரத்தில் உள்ள உயிவாங் நகரில் இன்று (ஏப்ரல் 30) ஒரு அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 2 பேர் உயிரிழந்து உள்ளனர். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
நேசன் – டாங்கில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்டிடத்தின் 14 வது மாடியில் உள்ள ஒரு குடியிருப்பில் இன்று (ஏப்ரல் 30) காலை சுமார் 10:30 மணி அளவில் இந்த தீ விபத்தானது ஏற்பட்டுள்ளது.
விபத்து காரணமாக அதிக அளவில் கருப்புப் புகை வெளியேறக் காரணத்தால் பல அவசர அழைப்புகள் விடுக்கப்பட்டுள்ளன.
அந்த குடியிருப்பில் வசித்து வந்த 60 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் அடையாளம் தெரியாத காரணங்களால் உயரத்திலிருந்து தவறி விழுந்து தீ விபத்து நடந்த இடத்திலேயே உயிரிழந்ததாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்து இருக்கின்றனர்.
மேலும் அதே அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த 60 வயதுகளில் இருந்த அவரது மனைவியும்,14 வது மாடி குடியிருப்பில் இருந்து மீட்பு குழுவினரால் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டாார்.
விபத்து காரணமாக கட்டிடத்தில் இருந்து 8 பேர் வெளியேற்றப்பட்டு இருக்கின்றனர். அவர்களில் 5 பேர் புகையை சுவாசித்தக் காரணத்தால் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். அவர்களில் 2 நபர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அதிகாரிகள் அனுப்பி வைத்தனர். மற்ற 3 நபர்களுக்கும் சிறு காயங்கள் ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு செல்லவில்லை.
இந்த தீ விபத்தில் வேறு ஏதேனும் உயிரிழப்புகள் உள்ளதா என்பதை இன்னும் உறுதிப்படுத்தவில்லை என தீயணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தால் பல உயிர்கள் பறிபோக வாய்ப்பு இருப்பதால் அருகில் உள்ள 4 தீயணைப்பு நிலையங்களில் இருந்து பணியாளர்களையும், உபகரணங்களையும் வர வைத்ததாக அதிகாரிகள் கூறினர். சம்பவ இடத்திற்கு 110 பணியாளர்களும் 37 உபகரணங்களும் அனுப்பி வைக்கப்பட்டது.
தீ விபத்து நடந்த இடம் சீரமைக்கப்பட்ட பிறகு, தீ விபத்திற்கான சரியான காரணம் மற்றும் சேதத்தின் அளவு என்ன என்று விசாரித்து தகவல் தெரிவிக்கப்படும் என காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.