உலக மக்களின் பார்வையில் சிங்கப்பூர் சட்டம் எப்படி..??
சிங்கப்பூர்:சிங்கப்பூர் எப்போதும் உலகின் பாதுகாப்பான நாடுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. அதற்குக் காரணம் அதன் கடுமையான சட்டங்கள் மற்றும் சட்ட அமலாக்கத்தின் திறமை போன்றவை ஆகும். சமீபத்தில் சிங்கப்பூர் உள்துறை அமைச்சகம் நடத்திய கணக்கெடுப்பு, இதை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.
2024 ஆம் ஆண்டு, ஆறு பிராந்திய நகரங்களில் உள்ள 20 முதல் 64 வயது கொண்ட 12,000 பேரிடம் ஆன்லைன் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இக்கணக்கெடுப்பின் நோக்கம், சிங்கப்பூரின் சட்டங்களும் பாதுகாப்பு நிலையும் குறித்த வெளிநாட்டு மக்களின் கருத்தை அறிவதற்காக நடத்தப்பட்டது.
பாதுகாப்பு மீதான நம்பிக்கை
கணக்கெடுப்பில் பங்கேற்றவர்களில் பெரும்பாலோர் சிங்கப்பூரை பாதுகாப்பான நாடு என்று கருதினர்.
💠 82.3% பேர் சிங்கப்பூருக்கு பயணம் செய்வது பாதுகாப்பானது என நம்பினர்.
💠 87.3% பேர் சட்ட அமலாக்க அதிகாரிகள் பாதுகாப்பை உறுதி செய்வார்கள் என நம்பினர்.
சட்ட விழிப்புணர்வு
சிங்கப்பூர் சட்டங்கள் குறித்த விழிப்புணர்வு மக்களிடையே அதிகமாக உள்ளது.
💠 95% பேர் போதைப்பொருள் சட்டவிரோதம் என்பதை அறிந்திருந்தனர்.
💠 86.8% பேர் குற்றவாளிகளைப் பிடிக்க அவர்கள் திறமையானவர்கள் என்று நம்புகின்றனர்.
💠 குற்றம், போதைப்பொருள் உட்கொள்வது அல்லது கடத்தலில் ஈடுபட்டால் கைது செய்யப்படும் வாய்ப்பு 87–91% வரை உள்ளது என்று பங்கேற்பாளர்கள் நம்புகின்றனர்.
💠 அதேபோல் தண்டிக்கப்படுவதற்கான வாய்ப்பும் 88–91% வரை உள்ளது என்றும் அவர்கள் கருதினர்.
இந்த ஆய்வு, சிங்கப்பூரின் கடுமையான சட்டங்களும்,சட்ட அமலாக்கத்தின் செயல் திறனும்,அதை உலகில் பாதுகாப்பான நாடு என்ற நிலைக்கு உயர்த்தியுள்ளன என்பதைக் காட்டுகிறது. குற்றத் தடுப்பு, சமூக பாதுகாப்பு மற்றும் சட்டத்தின் கடுமை ஆகியவை ஒன்றிணைந்து, சிங்கப்பூரை சுற்றுலா பயணிகளுக்கும் குடிமக்களுக்கும் நம்பிக்கையுடன் வாழக்கூடிய நாடாக உருவாக்கியுள்ளன.