சிங்கப்பூரில் இனிமேல் இந்த தவறை செய்தால் அபராதம் மற்றும் சிறை!என்ன தவறு என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்.

சிங்கப்பூரில் இனிமேல் இந்த தவறை செய்தால் அபராதம் மற்றும் சிறை! என்ன தவறு என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்.

சிங்கப்பூரில் இனிமேல் இந்த தவறை செய்தால் அபராதம் மற்றும் சிறை!
என்ன தவறு என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்.

சிங்கப்பூரில் பல பகுதிகளில் பாதசாரிகள் மற்றும் சைக்கிள் ஓட்டிகளுக்கு தனித்தனியாக வழித்தடங்கள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

அதில் பாதசாரிகள் மட்டுமே செல்லும் வழித்தடங்களை பயன்படுத்தும் சைக்கிள் ஓட்டிகளுக்கும் மோட்டார் பொருத்தப்படாத தனிநபர் நடமாட்ட சாதனங்களை பயன்படுத்துவோருக்கும்.  செவ்வாய்க்கிழமை ஜூலை 1 முதல் தண்டனை விதிக்கப்படலாம்.

மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் மின்சக்கர நாற்காலிகளுக்கு மட்டுமே அந்தப் பகுதியில் அனுமதி உண்டு.

மேலும் அதில் பாடசாலைகளுக்கு மட்டுமே என்ற வாக்கியமும் எழுதப்பட்டிருக்கும்.

சைக்கிள் ஓட்டிகள் செல்லும் வழித்தடங்கள் சிவப்பு நிறத்தில் வண்ணம் தீட்டப்பட்டிருக்கும்.

சைக்கிளில் செல்பவர்களும் மோட்டார் பொருத்தப்படாத தனிநபர் சாதனங்களில் செல்பவர்களும் நடைபாதையில் செல்லாமல் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பாதையில் அனுமதிக்கப்படுவர்.

ஜூலை ஒன்னாம் தேதி முதல் இந்த விதியை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்று நில போக்குவரத்து ஆணையம் வலியுறுத்தியது.

மூத்தோர்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக நில போக்குவரத்து ஆணையம் சொன்னது.

பாதசாரிகள் மட்டுமே செல்லும் பாதையில் வாகனத்தை ஒட்டியது தொடர்பாக முதல் முறை குற்றம் புரிபவர்களுக்கு 2000 வெள்ளி வரை அபராதம் அல்லது மூணு மாதம் வரை சிறை தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

அதே நேரத்தில் சைக்கிள் ஓட்டிகளின் பாதைகளை பயன்படுத்தும் பாதசாரிகளுக்கு அபராதம் கிடையாது இருப்பினும் அவர்கள் பாதுகாப்பு கருத்தில் கொண்டு பாதசாரிகள் மட்டுமே செல்லும் பாதையில் செல்ல வலியுறுத்தப்படுகின்றது.

குற்றம் நடந்ததா என்பதை உறுதி செய்ய பரிசீலிக்கப்பட்ட சில அணுகுமுறைகளை அமலாக்க அதிகாரிகள் மேற்கொள்வர் என தெரிவித்தது.

பாதைகளில் வேகமாக அல்லது பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என ஆணையம் குறிப்பிட்டது.

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan