சிங்கப்பூரில் சட்டவிரோத வேலைவாய்ப்பு..!! இரண்டு பெண்கள் சிக்கியது எப்படி…??

சிங்கப்பூரில் சட்டவிரோத வேலைவாய்ப்பு..!! இரண்டு பெண்கள் சிக்கியது எப்படி...??

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் செல்லுபடியாகும் பணி அனுமதிச் சீட்டு இன்றி சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்ட பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த 53 வயதான பிடோ எர்லிண்டா ஒகாம்போவுக்கும், அவரை பணியமர்த்திய 64 வயதான சோ ஓய் பெக்கிற்கும் நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.

மனிதவள அமைச்சகத்தின் (MOM) விசாரணையில், எர்லிண்டா சுமார் நான்கு ஆண்டுகளாக சோவின் வீட்டில் பகுதிநேர சுத்தம் செய்யும் பணிகளை செய்ததும், சோ பின்னர் அவரை மற்றொரு முதலாளிக்கும் பரிந்துரைத்ததும் தெரியவந்தது.

நீதிமன்றம் சோவுக்கு S$7,000 அபராதமும், எர்லிண்டாவுக்கு இரண்டு குற்றச்சாட்டுகளுக்காக S$13,000 அபராதமும் விதித்தது. இருவரும் முழுமையாக அபராதம் செலுத்தினர்.

சட்டப்படி, செல்லுபடியாகும் பணி அனுமதிச் சீட்டு இன்றி பணிபுரிந்தால் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது S$20,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். அதேபோல், அனுமதி இல்லாத வெளிநாட்டு ஊழியரை பணியமர்த்தியவர்களுக்கு 12 மாதங்கள் சிறைத்தண்டனை அல்லது S$5,000 முதல் S$30,000 வரை அபராதம் விதிக்கப்படும்.

 

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan