நாளை முதல் அமல்..!! LTA வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

நாளை முதல் அமல்..!! LTA வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சிங்கப்பூரில் கனரக வாகனம் மற்றும் ட்ரெய்லர் ஆப்பரேட்டர்களின் கருத்துக்களை கொண்டு தற்போது நிலப் போக்குவரத்து ஆணையம் ஒரு புதிய அறிவிப்பை இன்று(05/02/26) அறிக்கையாக வெளியிட்டுள்ளது.

கனரக வாகனம் மற்றும் ட்ரெய்லர் உரிமையாளர்கள் தங்களுடைய வாகனங்களை நள்ளிரவு முதல் காலை 6:00 மணி வரை அவர்களுக்கென நியமிக்கப்பட்ட இடங்களில் நிறுத்துவது உறுதி செய்து பதிவு செய்வதற்கு சாலை வரியை புதுப்பிப்பதற்கு மற்றும் வாகனத்தினுடைய உரிமையை மாற்றுவதற்கு முன்பாக செல்லுபடியாகும் பார்க்கிங் சான்றிதழ் வைத்திருத்தல் அவசியம்.

வரை பதிவு செய்யப்பட்டுள்ள ட்ரெய்லர்களுக்கான வாகனம் நிறுத்துமிடச் சான்றிதழ்களுக்கான தேவையானது இரண்டு வருட சோதனை காலத்திற்கு தற்போது நிறுத்தி வைக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்த நடவடிக்கையானது கண்டெய்னர் டிரைலர்கள், குறைந்த தள ட்ரெய்லர்கள் மற்றும் பிளாட் பெட் ட்ரெய்லர்களுக்கு உள்ளடங்கியதாகும்.

சிங்கப்பூர் லாஜிஸ்டிக் சங்கத்துடன் கலந்து ஆலோசனை செய்த பிறகு இந்த சோதனையானது தொடங்கப்பட்டது என்று நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) கூறியுள்ளது.

ட்ரெய்லர்கள் தொழில்துறை வசதிகள் கொள்கலன் யாருகள் மற்றும் தளவாட மையங்களில் நிறுத்தப்படுகின்றன. பிறகு இலக்கிய பின்பு செங்குத்தாக நிறுத்தப்படலாம். இது இடத்தை மிகவும் திறமையாக பயன்படுத்துகின்றது என்பதை LTA சுட்டி காட்டியுள்ளது. இதனால் சோதனை காலத்தில் அவை இந்த தேவையில் இருந்து விலக்கு அளிக்கப்படுகின்றன.

பார்க்கிங் அனுமதி தேவைகள் நிறுத்தப்பட்டாலும் டோ லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் தங்கள் வாகனங்களை முறையாக நிறுத்த வேண்டும் என்பதையும் LTA வலியிறுத்தியுள்ளது.

கனரக வாகன நிறுத்தமிடங்களுக்கு ஏற்கனவே சீசன் பாஸ்களை வாங்கிய டோ லாரி உரிமையாளர்கள் தங்களிடங்களை தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ளலாம். பிப்ரவரி ஆறாம் தேதிக்கு முன்பு செலுத்தப்பட்ட $6 பார்க்கிங் அனுமதி கட்டணமானது திரும்ப பெறப்படாது. கனரக வாகனங்களுக்கு இன்னும் செல்லபடியாகின்ற பார்க்கின் அனுமதி தேவை என்பதையும் LTA கூறியுள்ளது.

இந்த திட்டத்துடன் இணைந்து அனைத்து கனரக வாகன வகைகளுக்கும் பார்க்கிங் அனுமதி முறையை விரிவாக மதிப்பாய்வு செய்வதாகவும் நிலப்போக்குவரத்தாணையம் கூறியுள்ளது.

இதனால் சில கனரக வாகனங்கள் நிறுத்தம் இடங்களில் ட்ரெய்லர் பார்க்கின் இடங்கள் காலியாக வாய்ப்பு உள்ளது. வாகன நிறுத்தமிடங்களை அதிகப்படுத்துவதற்கு வாகன நிறுத்துமிட உரிமையாளர்கள் இந்த இடங்களை கனரக வாகனம் நிறுத்தம் இடங்களாக மாற்ற வேண்டும் எனில் நிலப் போக்குவரத்து ஆணையத்திடம் விண்ணப்பிக்கலாம்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK