சிங்கப்பூர் உயர் நீதிமன்றம் குறித்த முக்கிய அப்டேட்..!!

சிங்கப்பூர் உயர் நீதிமன்றம் குறித்த முக்கிய அப்டேட்..!!

சிங்கப்பூர் உயர் நீதிமன்றத்தில் அதிபர் சண்முக ரத்தினம் அவர்கள் புதிதாக 2 புதிய நீதிபதிகளை நியமிப்பதற்கு தேர்ந்தெடுத்துள்ளார்.

நீதிமன்ற ஆணையர்களான முகமது ஃபைசால் முகமது அப்துல் காதர், சுசில் சுகுமாரன் நாயர் ஆகியவர்கள் நேற்று (மார்ச் 9) முதல் நீதிபதிகளாக உயர்நீதிமன்றத்தில் பணியாற்றுவார்கள் என்று தகவல் தெரிவிக்கப்பட்டது.

திரு ஃபைசால், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் 2005 ஆம் ஆண்டு சட்டத்துறையில் இளநிலை பட்டம் பெற்று பிறகு 2009 ஆம் ஆண்டு ஹார்வர்டு சட்டப் பள்ளியில் முதல்நிலை பட்டம் பெற்றார்.

பதவி விவரம்:
2005 ஆம் ஆண்டு சட்டப் பணியில் சேர்ந்து பிறகு 2007 ஆம் ஆண்டு அரசாங்க தலைமை வழக்கறிஞராக அலுவலகத்திற்கு மாற்றப்பட்டார். அதன் பிறகு 2020 ஆம் ஆண்டு மூத்த சட்ட ஆலோசகராகவும் 2024 ஆம் ஆண்டு நீதிமன்ற ஆணையராகவும் பொறுப்பேற்றார்.

திரு சுகுமாரன் நாயர் அவர்கள் 1989 ஆம் ஆண்டு சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பை முடித்து 1990 ஆம் ஆண்டு அவர் முதன்முதலாக சட்டத்துறையில் சேர்ந்தார்.

திரு சுகுமாரன் அவர்களுக்கு தனியார் நிறுவனங்கள் வேலை இடம் வங்கித் துறை மற்றும் நிதித்துறை என பல வழக்குகளில் முன் அனுபவம் உள்ளது. மேலும் இவர் 2025 ஆம் ஆண்டு நீதிமன்ற ஆணையராக பொறுப்பேற்றார்.

சிங்கப்பூர் நீதிமன்றங்களில் தற்போது மொத்தமாக 35 நீதிபதிகள் பதவியில் உள்ளனர்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK