இந்தியாவின் 8வது மக்கள் தொகை கணக்கெடுப்பு : ஏப்ரல் 1 முதல் தொடக்கம் ..!!

இந்தியாவின் 8வது மக்கள் தொகை கணக்கெடுப்பு : ஏப்ரல் 1 முதல் தொடக்கம் ..!!

இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பானது நடத்தப்படுகிறது. கடைசியாக 2011 ஆம் ஆண்டு இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

சுதந்திரத்திற்கு பிறகு இதுவரை 7 முறை மக்கள் தொகை கணக்கெடுப்புகள் நடைபெற்று இருக்கின்றன. இது 8-வது மக்கள் தொகை கணக்கெடுப்பு (சுதந்திரத்திற்கு பிறகு) ஆகும்.

இந்த கணக்கெடுப்பானது 2021 ஆம் ஆண்டு நடந்திருக்க வேண்டும் ஆனால் கொரோனா காரணத்தால் தள்ளி வைக்கப்பட்டது.

இந்த கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. இதில் முதல் கட்ட கணக்கெடுப்பானது இந்த ஆண்டு (2026) ஏப்ரல் 1ஆம் தேதி முதல் செப்டம்பர் 30ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

முதற்கட்ட கணக்கெடுப்பில் வீடுகளின் பட்டியல், வீட்டின் வசதிகள், டிவி,வாகனம்,கணினி மற்றும் வீட்டு அறைகளின் எண்ணிக்கை போன்ற 33 கேள்விகள் கேட்கப்பட உள்ளன.

நடைபெற இருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பில் பொதுமக்கள் தங்களது பெயர்களை தாங்களே சேர்த்துக் கொள்ள முடியும். இது குறித்த அறிவிப்புகளை மத்திய அரசு ஏற்கனவே வெளியிட்டு இருந்தது.

டிஜிட்டல் முறையில் நடைபெற உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பில், மக்கள் அவர்களது சுய விபரங்களை இந்த ஆண்டு (2026) ஜூலை 17 முதல் 31ஆம் தேதி வரை “se.census.gov.in இணையதளத்தில் பதிவு செய்யலாம்.

வீடு தேடி வரும் நேரடி கணக்கெடுப்பானது 2026 ஆகஸ்ட் 1 முதல் 30ஆம் தேதி வரை நடைபெறும். புதுச்சேரியில் சுயவிபரப்பதிவு மே 17 முதல் 31ஆம் தேதி வரையிலும், வீடு தேடி வரும் கணக்கெடுப்பு ஜூன் 1 முதல் 30-ம் தேதி வரையிலும் நடைபெறும்.

இந்த கணக்கெடுப்பை அடுத்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கணக்கெடுப்பில் ரூ.11,788.24 கோடி மதிப்பில் 30 லட்சம் அதிகாரிகள் இப்பணியில் ஈடுபட உள்ளனர்.

தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெற உள்ள காரணத்தால் இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியானது ஜூலை 17 – இல் தொடங்கப்பட உள்ளது.

 

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK