பொதுமக்களுக்கு எச்சரிக்கை..!! விடுமுறை காலத்தில் அதிகரிக்கும் இணைய மோசடி..!!!

பொதுமக்களுக்கு எச்சரிக்கை..!! விடுமுறை காலத்தில் அதிகரிக்கும் இணைய மோசடி..!!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் தேசியக் குற்றத்தடுப்பு மன்றம் (National Crime Prevention Council) ஆண்டு இறுதி விடுமுறை காலத்தில் இணைய வர்த்தக மோசடிகள் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக எச்சரித்துள்ளது.

அக்டோபர் மாதத்தில் மட்டும் 540க்கும் மேற்பட்ட இணைய மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பொதுமக்கள் இழந்த தொகை இரண்டரை மில்லியன் சிங்கப்பூர் டாலரை கடந்துள்ளது.

மன்றம் பொதுமக்களுக்கு, இணையத்தில் பொருட்களை வாங்கும்போது விற்பனையாளர் யார் என்பதையும், அவரது தகுதி மற்றும் நம்பகத்தன்மையைச் சரிபார்க்கவும் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், சந்தேகத்துக்குரிய இணைப்புகள் அல்லது விளம்பரங்களை கிளிக் செய்ய வேண்டாமெனவும் எச்சரித்துள்ளது.

இணைய வர்த்தக தளங்களின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தவும், மோசடிகளைத் தடுக்கவும் உள்துறை அமைச்சகம் மதிப்பீட்டு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK