கொரோனாவை விட ஆபத்தானதா எபோலா..?எபோலா வைரஸ் பற்றிய அதிர்ச்சி தகவல்கள்..!!

கொரோனாவை விட ஆபத்தானதா எபோலா..?எபோலா வைரஸ் பற்றிய அதிர்ச்சி தகவல்கள்..!!

எபோலா வைரஸ் என்றால் என்ன? அது எப்படி பரவுகிறது?அதற்கு மருந்து இருக்கிறதா என்று இந்த பதிவில் பார்க்கலாம்

1. எபோலா என்றால் என்ன?
எபோலா வைரஸ் நோய் (இ.வி.டி.) என்பது ஒரு வகை வைரஸ் நோயாகும்.

மனிதர்களையும் சில விலங்குகளையும் பாதிக்கும்.
ஃபிலோவிரிடே குடும்பத்தைச் சேர்ந்த ஆர்த்தோஎபோலா வகை வைரஸ்களால் ஏற்படுகிறது.

1976-ம் ஆண்டு காங்கோ ஜனநாயகக் குடியரசில் உள்ள எபோலா நதிக்கரையில் இந்நோய் முதன்முதலில் கண்டறியப்பட்டது. அதனால் இதற்கு எபோலா என்று பெயர் வந்தது.

2. நோய்க்காரணிகள்:
எபோலா வைரஸின் பல இனங்கள் நோய் பரவலுக்கு காரணமாக இருக்கின்றன. அவற்றுள் ஜைர் எபோலா வைரஸ், சூடான் எபோலா வைரஸ், பண்டியபுக்யோ எபோலா வைரஸ் முக்கியமானவை.

பழ வெளவால்கள் இந்த வைரஸ்கள் பரவலுக்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கின்றன.

3. எபோலா பரவும் விதம்!
👉உடலில் வெளிப்படும் திரவங்கள் மூலம் எபோலா வைரஸ் பரவும்.
அத்தகைய உடல் திரவங்கள்: இரத்தம் | உமிழ்நீர் | வியர்வை | வாந்தி | சிறுநீர் | விந்து

👉பரவும் சூழல்:
பாதிக்கப்பட்ட விலங்குகளுடன் நேரடி தொடர்பு (வவ்வால், குரங்கு, சிம்பான்சி).

👉 பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி நோயாளிகளை பராமரித்தல்.

4. எபோலா நோய் அறிகுறிகள்:
* திடீர் காய்ச்சல்
* கடுமையான தலைவலி
* தசை வலி மற்றும் மூட்டு வலி
* சோர்வு மற்றும் பலவீனம்
* தொண்டை வலி | வாந்தி
* வயிற்றுப்போக்கு
* வயிற்று வலி
* தோல் சிரங்கு
* உட்புற மற்றும் வெளிப்புற இரத்தக்கசிவு
* சம்பந்தப்பட்ட உடல் உறுப்பு செயலிழப்பு
*ஆரம்ப நிலையில் மலேரியா, டெங்கு போன்ற நோய்களை போலவே எபோலா வைரஸால் ஏற்படும் நோய்த்தொற்றுகளின் வீரியம் அமைந்திருக்கும்.

5. அறிகுறிகள் வெளிப்படும் காலம்:
தொற்று ஏற்பட்ட பிறகு பொதுவாக அறிகுறிகள் தோன்றும் காலம்: 2 முதல் 21 நாட்கள்

நோய் அறிகுறிகள் தோன்றும் கால இடைவெளி: 8 முதல் 10 நாட்கள்

6. நோய் கண்டறிதல்:
இந்த நோயை உறுதிப்படுத்த ஆய்வக பரிசோதனைகள் அவசியம்.

பரிசோதனைகள்:
* ஆர்.டி.-பி.சி.ஆர். பரிசோதனை
* ஆண்டிஜன் டிடெக்ஷன் பரிசோதனை
* ஆண்டிபாடி பரிசோதனை

🔬 பரிசோதனைக்காக எடுக்கப்படும் மாதிரிகள் உயிர் பாதுகாப்பு முறைகளில் கவனமாக கையாளப்பட வேண்டும்.

7. சிகிச்சை
எபோலாவிற்கு முழுமையான நிரந்தர மருந்து இல்லை. ஆனால் ஆரம்ப சிகிச்சை உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பை அதிகரிக்க உதவும்.

சிகிச்சை முறைகள்:
👉 வாய்வழி மற்றும் நரம்பு வழியே திரவங்கள் செலுத்துதல்

👉ஆக்சிஜன் சிகிச்சை

👉இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துதல்

👉இரண்டாம் நிலை
தொற்றுகளுக்கான சிகிச்சை அளித்தல்

👉சில சந்தர்ப்பங்களில் வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் மற்றும் மோனோகுளோனல் ஆண்டிபாடி சிகிச்சைகள் பயன்படுத்தப்படுகின்றன.

8. நோய் தடுப்பு முறை மற்றும் கட்டுப்பாடு:

✨பாதிக்கப்பட்ட நபர்கள் மற்றும் விலங்குகளுடன் நேரடி தொடர்பைத் தவிர்க்கவும்.

✨தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் (பி.பி.இ.) பயன்படுத்தவும்.

✨கைகளை சோப்பு அல்லது கிருமிநாசினியால் அடிக்கடி கழுவவும்.

✨மருத்துவ உபகரணங்களை முறையாக கிருமி நீக்கம் செய்யவும்.
இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்யும்போது பாதுகாப்பான முறைகளைப் பின்பற்றவும்.

✨ஜைர் எபோலா வைரஸ் உட்பட சில எபோலா வைரஸ் இனங்களுக்கு தடுப்பூசிகள் கிடைக்கின்றன.

>>முக்கிய குறிப்பு: எபோலா சாதாரண சளி அல்லது காய்ச்சல் போல காற்றின் மூலம் பரவாது.<<