முன்னணி இசை அமைப்பாளர் அனிருத்திற்கு திருமணமா? யாருடன்!! எப்போது?
அனிருத் பற்றி பரவும் ‘கிசுகிசு’
ஆட்டம் போடச் செய்யும் இசையால் தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக மாறியுள்ளார், அனிருத். முன்னணி நடிகர்களின் படங்களை கைவசம் வைத்திருக்கிறார்.
தமிழ் தாண்டி தெலுங்கு, இந்தி மொழி படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். திரையுலகில் அதிக சர்ச்சைகளுக்கும் பெயர் போனவர் அனிருத். இவருடன் காதல், இவருடன் திருமணம் என்று அடிக்கடி கிசுகிசுக்கள் அவரை பற்றி வெளிவந்து கொண்டிருப்பது வழக்கமாகி விட்டது.
அந்தவகையில் சமீபத்தில் அனிருத் பற்றிய ஒரு ‘கிசுகிசு’ வைரலாகி வருகிறது. தொழில் அதிபர் ஒருவரின் மகளை காதலிப்பதாகவும், ஸ்பெயினில் வருகிற நவம்பர் மாதம் திருமணம் நடைபெற இருப்பதாகவும் ஒரு தகவல் காட்டுத்தீயாக பரவி வருகிறது. அனிருத் விளக்கம் அளிப்பாரா?