உலகில் கொசுக்களே இல்லாத தேசத்தின் பட்டியலில் இருந்து ஐஸ்லாந்துக்கு இப்படி ஒரு நிலைமையா..??

உலகில் கொசுக்களே இல்லாத தேசத்தின் பட்டியலில் இருந்து ஐஸ்லாந்துக்கு இப்படி ஒரு நிலைமையா..??

ஐஸ்லாந்து நாட்டினுடைய தென்மேற்கில் உள்ள ஜோஸ் என்ற பள்ளத்தாக்கு பகுதியில் முதல்முறையாக கொசுக்கள் தென்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதன் மூலமாக உலகில் இதுவரை கொசுக்களே இல்லாத தேசம் என்ற தகுதியைப் பெற்றிருந்த ஐஸ்லாந்து தற்போது அதை இழந்துவிட்டது.

ஐஸ்லாந்தை தவிர்த்து கொசுக்கள் இல்லாத இன்னொரு பகுதி என்றால் அது அண்டார்டிகா கண்டம் என்று கூறப்படுகிறது.

ஐஸ்லாந்தில் நிலவும் நடுக்கம் குளிரும் தேங்கிய நீர்நிலைகள் இல்லாத சூழலும் தான் இங்கு இதுவரை கொசுக்கள் இல்லாததற்கு காரணம் என்று கூறப்பட்டுள்ளது ஆனால் தற்போது ஐஸ்லாந்தில் பலமுறை இந்த ஆண்டு அதிகபட்ச வெப்பம் பதிவாகியுள்ள நிலையில் இந்த மாற்றம் நிலவியுள்ளதாக தெரியவந்துள்ளது.

ஐஸ்லாந்தினுடைய ஜோஸ் பகுதியில் இரண்டு பெண் கொசுக்களும், ஓர் ஆண் கொசுவும் கண்ணறியப்பட்டுள்ளதாக அந்த நாட்டினுடைய பூச்சியியல் துறை நிபுணர் ஜோர்ன் ஹிஜால்டாசன் கூறியுள்ளார்.

இந்த கொசுக்கள் ‘Culisteta annulata’ என்ற இனத்தைச் சேர்ந்தவை எண்ணவும் எளிதில் கடும் குளிராக இருந்தாலும் தாக்குப் பிடிக்கும் ரகத்தைச் சேர்ந்தது என்றும் இவர் கூறியுள்ளார்.

இந்த வகையான கொசு இனங்கள் ஐரோப்பா வடக்கு ஆப்பிரிக்க நாடுகளில் மட்டுமே தென்படுபவை ஆகும். ஆனால் எப்படி ஐஸ்லாந்துக்கு இந்த கொசு இனங்கள் வந்தது என்பது குறித்து தெரியவில்லை என்று ஐஸ்லாந்து நாட்டைச் சேர்ந்த பூச்சியியல் துறை சார்ந்த ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

சில ஆய்வாளர்கள் பொதுவாக கொசுக்களானது கப்பல்கள் அதில் வரும் கண்டைனர்கள் மூலமாக பிற நாடுகளுக்கு பரவ வாய்ப்புள்ளதாகவும் அதனால் துறைமுக பகுதியில் தென்பட்டால் வெளிநாட்டிலிருந்து வந்ததாக சொல்ல முடியும் எனவும் கூறுகின்றனர்.


இந்த கொசு இனங்கள் ஐஸ்லாந்தின் ஒரு பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள ஒரு வீட்டின் தோட்டத்தில் இருந்துள்ளது அதனால் இவை எண்ணிக்கையில் இன்னும் அதிகமாக ஐஸ்லாந்தில் இருக்கும் என தோன்றுகிறது என ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK