விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே இப்படியா?

விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே இப்படியா?

ஜப்பானின் ஒக்கினாவாவில் இருந்து All Nippon Airways விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் ஏதோ எரியும் வாடை வந்தது.

அது ஒரு இருக்கையில் இருந்து வந்து கொண்டிருந்தது.

இருக்கைக்கு அடியில் பவர் பேங்க் என்ற மின்னோட்டம் சாதனம் ஒன்று இருந்தது. புகை வந்ததை கண்டறிந்த பக்கத்தை இருக்கையில் உள்ள ஒரு பயணி மின்னோட்ட சாதனம் மீது தண்ணீரை ஊற்றினார்.

அதன் பிறகு புகை நின்றது என இந்த செய்தி ஆனது NHK ஊடகம் மூலம் தெரிய வந்தது.

சாதனத்தால் எந்த வித ஆபத்தும் இல்லை என்று உறுதிப்படுத்திய பின் விமானத்தை தொடர்ந்து இயக்க ஆரம்பித்தனர்.

இந்த விமானத்தில் 355 பேர் பயணம் செய்ததாக தெரியவந்துள்ளது. இவர்கள் அனைவரும் தோக்கியோவில் பாதுகாப்பாக தரையிறங்கியதாக NHK கூறியுள்ளது.

ஜப்பானில் விமான பயணிகள் இது போன்ற மின்னோட்ட சாதனங்களை கையுடன் வைத்துக் கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் இது போன்ற அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.