சிங்கப்பூர்: மார்ச் 22ஆம் தேதி காவல்துறை ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் 29 வயதான ஒரு நபர் அறிமுகம் இல்லாத நபரிடம் இருந்து அழைப்பு வந்ததாக தகவல் கொடுத்ததை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அரசு அதிகாரிகள் போல ஆள் மாறாட்டம் செய்து ஒரு நபரை ஏமாற்றிய தகவல் காவல்துறையினருக்கு தெரியவந்தது. அழைப்பு வந்த இடம் எம்1 தொலைத்தொடர்பு நிறுவனத்திடம் இருந்து என்றும் பாதிக்கப்பட்டவரின் தொலை தொடர்பு ஒப்பந்தத்தில் சிக்கல் உள்ளது என்று கூறி அவரிடம் ஒப்பந்தம் பெறுவதற்கு கேட்டபோது தன்னிடம் இல்லை என மறுத்துவிட்டார். அதன் பிறகு அவரது அடையாளம் திருடப்பட்டது என தெரியவந்தது.
விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் விசாரணையை நடத்துவதற்காக அவர் தனது வங்கி கணக்கு விவரங்களையும் 9000 டாலர் ரொக்க பணத்தையும் வழங்க வேண்டும் என்று மோசடியில் ஈடுபட்ட மோசடி செய்த நபர் HKMA அதிகாரி என்று அவரிடம் கூறி பேசியுள்ளார்.
நாங்கள் கேட்கும் கேள்விக்கு பதில் கூறவில்லை எனில் கைது செய்யப்படுவீர் என எச்சரித்தனர். பயத்தின் காரணமாக பாதிக்கப்பட்டவர் பணத்தை எடுத்துக்கொண்டு கடந்த சனிக்கிழமை யான மார்ச் 21ஆம் தேதி உமே பகுதியில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரை சந்தித்த அவர் எடுத்து வந்த பணத்தை கொடுத்துள்ளார்.
இது குறித்த தகவலை காவல்துறையிடம் புகார் அளித்தபோது விசாரணையை மேற்கொண்ட மோசடி தடுப்பு நடவடிக்கை பிரிவின் அதிகாரிகள் 27 வயதான அந்த நபரை அடையாளம் கண்டு இன்று (மார்ச் 25) கைது செய்துள்ளனர். மேலும் அவர்கள் வைத்திருந்த போலி அடையாள ஆவணங்களையும் பறிமுதல் செய்தனர்.
முதற்கட்ட விசாரணையின் போது மோசடி கும்பலை சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்ட நபர்களிடமிருந்து பெற்ற பணம் மற்றும் பொருட்களை சேகரித்து அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அறிவுறுத்தியதாக கூறப்பட்டுள்ளது.
இது போன்ற குற்றச்செயல்கள் மூலம் கிடைத்த வருமானத்தை மற்றொருவர் தக்கவைத்துக் கொள்ள உதவியதாக கைது செய்த நபர் மீது இன்று (மார்ச் 25) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட உள்ளது.
இவர் குற்றவாளி என்று நிரூபணமானால் இவருக்கு பத்து ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் 5 லட்சம் வெள்ளி வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட நபர்களிடமிருந்து பணம் மற்றும் பிற பொருட்களை பறிப்பதில் மோசடி கும்பல்களுக்கு உதவுவதற்காக சமீப காலமாக அதிக நபர்கள் அதுவும் மலேசிய நபர்கள் நாட்டிற்குள் நுழைந்து வருவதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். மோசடி நடவடிக்கைகளில் ஈடுபடும் அனைத்து நபர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.