திடீரென மூடப்பட்ட மசாஜ் பார்லர் கடைகள்: பணத்தை இழந்த வாடிக்கையாளர்கள்..!!!
சிங்கப்பூரில் இயங்கி வரும் வான்யாங் என்ற மசாஜ் பார்லர் கடைகள் நேற்று (டிசம்பர் 2, 2025) மூடப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்கள் சுமார் S$904,000 க்கும் அதிகமான மதிப்புள்ள தொகையை முன் பணம் ஆக செலுத்தியுள்ளனர். ஆனால் இவை அனைத்தும் பயன்படுத்தாத பேக்கேஜ்களாக இருந்தது.
எனவே வாடிக்கையாளர்கள் சிங்கப்பூர் நுகர்வோர் சங்கத்திடம் புகார் அளித்துள்ளனர். சுமார் 439 புகார்களை சிங்கப்பூர் நுகர்வோர் சங்கமானது பெற்றுள்ளது.
இதுகுறித்து சிங்கப்பூர் நுகர்வோர் சங்கத்தின் தலைவர் ஆன யாங் இன்று (டிசம்பர் 3, 2025) மேற்கண்ட தகவலை வெளியிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த வழக்கானது முதன் முதலில் நவம்பர் மாத இறுதியில் தெரியவந்தது. அப்போது சுமார் S$29,000 உடன் ஒப்பிடும்போது இது மிகவும் அதிகமான தொகையாக உயர்ந்திருக்கிறது.
மூன்று துணை நிறுவனங்களான வான்யங் ஹோல்டிங்ஸ், ஃபுட் மசாஜ் சென்டர் மற்றும் ஹெல்த் ப்ராடக்ட்ஸ் அண்ட் ஃபுட் மசாஜ் சென்டர் ஆகிய கடைகள் நவம்பர் 21ஆம் தேதி அன்று அதன் செயல்பாடுகளை நிறுத்திவிட்டது என்பதை உறுதிப்படுத்தப்பட்டது என யாங் கூறினார்.
வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் இழந்த தொகையை மீண்டும் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் செயல் முறையை RSM SG கார்ப்பரேட் அட்வைஸரி எடுத்துக் கள்ள வேண்டும் என்று முன்மொழிந்துள்ளார் மேலும் டிசம்பர் 10ஆம் தேதி அன்று நடைபெற உள்ள கடன் கொடுக்கப்படும் கூட்டத்திற்கு பிறகு கலைப்பு அதிகாரி முறையாக நியமிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள், நுகர்வோர் சங்கத்தின் எண்களான 62775100 தொடர்பு கொள்ளலாம் அல்லது www.case.org.sg என்ற இணையதளம் மூலமாகவும் உதவிக்கு அழைக்கலாம்.