அதிர்ச்சி..!!பாதசாரிகளை மோதிய மெர்சிடிஸ் பென்ஸ்..!!

அதிர்ச்சி..!!பாதசாரிகளை மோதிய மெர்சிடிஸ் பென்ஸ்..!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் காடி பாலிகிளினிக்கிற்கு வெளியே இரண்டு பாதசாரிகளை மெர்சிடிஸ் பென்ஸ் கார் மோதியது.குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக சந்தேகத்தின் பேரில் 36 வயது ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.

மேலும் காரைச் சோதனையிட்டதில் அதில் இ-சிகரெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

நேற்று (30.09.25) காலை 10:20 மணியளவில் யிஷுன் ரிங் ரோட்டின் பிளாக் 622 அருகே ஒரு போக்குவரத்து விபத்து நடந்ததாக காவல்துறை மற்றும் சிவில் பாதுகாப்பு படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

67 மற்றும் 81 வயதுடைய இரண்டு பெண் பாதசாரிகளும், காரை ஓட்டிய 36 வயது ஆண் ஓட்டுநரும் சுயநினைவுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

மூன்று பேர் கூ டெக் புவாட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக சிவில் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.

பின்னர் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக சந்தேகத்தின் பேரில் ஆண் ஓட்டுநர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.


அவரது காரில் இ-சிகரெட்டுகள் மற்றும் தொடர்புடைய பாகங்கள் இருப்பதையும் போலீசார் கண்டுபிடித்தனர்.

இவை அனைத்தும் சுகாதார அறிவியல் ஆணையத்தால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும் இச்சம்பவம் தொடர்பாக தற்போது போலீஸ் விசாரணை நடைபெற்று வருகிறது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK