சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்!!

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்!!

உலகிலேயே முதல் அனைத்துலக சுகாதார பராமரிப்புக்கான நீடித்த நிலத்தன்மை சான்றிதழைச் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனை பெற்றுள்ளது.

மருத்துவமனையில் பிளாஸ்டிக் பயன்பாட்டினை பாதிக்குமேல் குறைத்துள்ளது.

2030 ஆம் ஆண்டுக்குள் மறுசுழற்சி விகிதத்தை 60 சதவீதமாக அதிகரிக்க உறுதிபூண்டுள்ளது.

இத்தகைய முயற்சிகள் காரணமாக மருத்துவமனைக்கு சான்றிதழ் வழங்கப்பட்டதாக கூறப்பட்டது.

மயக்க மருந்து சுவாசக் கருவிகளை தினமும் மாற்றுவதற்கு பதிலாக வாரந்தோறும் மாற்றுவதன் மூலம் சுமார் 5.5 டன் கரிம வெளியேற்றம் குறைந்திருப்பதாக மருத்துவமனை கூறியது.அது சுமார் 270000 பிளாஸ்டிக் பாட்டில்களை மிச்சப்படுத்தும் அளவு.

கழிவுகளை வரிசைப்படுத்தும் புதிய முறை காகித மறுசுழற்சி விகிதத்தை கிட்டத்தட்ட 50 சதவீதம் அதிகரித்துள்ளது.

பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்யும் விகிதமும் சுமார் 230 சதவீதம் அதிகரித்துள்ளது.

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan