மெட்டா நிறுவனம் வெளியிட்ட புதிய தகவல்..!!!

மெட்டா நிறுவனம் வெளியிட்ட புதிய தகவல்..!!!

Facebook Messenger செயலிகளை உலகெங்கும் பயன்படுத்தும் 13 வயது முதல் 17 வயதுடைய வாலிபர்கள் தகாத உள்ளடக்கங்களை பார்ப்பதை தடுக்கும் விதமாக Meta நிறுவனம் புதிய கட்டமைப்புகளை மேற்கொண்டுள்ளது.

இதற்கு முன் சென்ற ஆண்டு (2024) Instagram இல் தகாத உள்ளடக்கங்களை பார்க்காதவாறு 13 வயது முதல் 17 வயது உடைய வாலிபர்களுக்கு “Teen Accounts” என்பதை அறிமுகம் செய்தது.


பிறகு ஏப்ரல் மாதத்தில் இந்த திட்டத்தை அமெரிக்கா, கனடா ஆஸ்திரேலியா, பிரிட்டன் ஆகிய நாடுகளில் Facebook, Messenger செயலிகளில் அறிமுகம் செய்தது.

இதன் மூலம் புதிய வகை கணக்குகள் வழியாக பிள்ளைகள் Facebook, Instagram செயலிகளை பயன்படுத்தும் நேரத்தையும் முறைகளையும் பெற்றோர் கட்டுப்படுத்தலாம்.

எனவே Meta நிறுவனம் பதின்ம வயதினருக்காக Facebook “Teen Accounts” எனப்படும் கூடுகள் பாதுகாப்பு கட்டமைப்புகளைக் கொண்ட கணக்குகளை உலகமெங்கும் அறிமுகப்படுத்தியது.

இதனால் 16 வயதுக்கு குறைந்தவர்கள் இந்த கட்டுப்பாடுகளை பெற்றோர் அனுமதி இன்றி அகற்ற வாய்ப்பில்லை என்றும் நிறுவனம் அறிவித்துள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK