சிங்கப்பூர் மாரத்தான் - 2026: புதிய ஏற்பாட்டாளர் நியமனம்..!!
சிங்கப்பூரில் ஆண்டின் இறுதியில் நடத்தப்படும் உலகின் புகழ்பெற்ற மாரத்தான் ஓட்ட பந்தயமானது இந்த ஆண்டு நடக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது.
இதனை அடுத்து இந்த போட்டிக்கு 2026 ஆம் ஆண்டு முதல் புதிதாக ஏற்பாட்டாளர் நியமிக்கப்பட்டுள்ளதாக ஸ்போர்ட்ஸ் சிங்கப்பூர் அமைப்பு இன்று (11/12/2025) அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரில் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் 10 ஆண்டுகளாக நடந்து வரும் சிங்கப்பூர் மாரத்தான் நிகழ்வு ஏற்பாடு செய்து வந்த ‘அயர்ன் மேன்’ குழுமத்தின் ஒப்பந்தம் இந்த ஆண்டு ஏப்ரல் நிறைவுற்றது.
தற்போது நியமித்துள்ள புதிய ஏற்பாட்டாளர்கள் இரண்டு தவணைகளின் அடிப்படையில் போட்டிக்கு ஏற்பாடு செய்யும் எனவும் ஒப்பந்தம் நீட்டிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் ஸ்போர்ட்ஸ் SG அமைப்பு தெரிவித்துள்ளது.
10 ஆண்டுகளாக தங்களுடன் இணைந்து மாரத்தான் ஓட்டப்பந்தயத்திற்கு ஏற்பாடு செய்த Ironman Asia நிறுவனத்திற்கு ஸ்போர்ட்ஸ் சிங்கப்பூர்( Sports SG) அமைப்பு நன்றியை தெரிவித்துள்ளது.
2016 ஆம் ஆண்டில் 46,000 பங்கேற்பாளர்கள் இருந்தனர். தற்போது 55,000 பங்கேற்பாளராக அதிகரித்துள்ளது.
எனவே சிங்கப்பூரில் பெரிதாக எதிர்பார்க்கப்படும் போட்டிகளில் ஒன்றான சிங்கப்பூர் மாரத்தான் போட்டி மிகவும் புகழ்பெற்று விளங்கப்போகிறது எனவும் ஸ்போர்ட்ஸ் சிங்கப்பூர் அமைப்பு தெரிவித்துள்ளது.