சிங்கப்பூர் பிரதமர் அறிவித்த புதிய மானிய திட்டம்..!!! யாருக்கு? என தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் சமூக மற்றும் குடும்ப மேம்பாட்டு அமைச்சகம் ஒரு அறிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து பிரதமர் கூறியதாவது: குழந்தைகளை வளர்ப்பதற்கான செலவுகளைப் பற்றி பல இளம் பெற்றோர்கள் கவலையில் உள்ளனர் என்பதை அரசாங்கம் அறிந்துள்ளது.
முக்கியமாக பெரிய குடும்பமாக இருக்கும்போது குடும்பத்திற்கு ஏற்ற இடமாக சிங்கப்பூரை மாற்ற அரசாங்கம் முடிந்த அனைத்து ஏற்பாடுகளையும் செய்யும் என்றும் கூறியுள்ளார்.
எனவே, பெரிய குடும்பங்களுக்கு குழந்தை பராமரிப்பு செலவுகளை குறைப்பதற்காக ஒரு புதிய மானிய திட்டம் கொண்டுவரப்பட்டது.
குறைந்தபட்சம் மூன்று குழந்தைகளை கொண்ட உள்ளூர் குடிமக்கள் குடும்பங்கள் குழந்தைகளுக்கு ஆறு வயதாகும் வரை ஒவ்வொரு மூன்றாவது அல் மற்றும் அடுத்தடுத்த குழந்தைகளுக்கும் வருடத்திற்கு $1,000 மானியம் வழங்கப்படும் என்று சமூக மற்றும் குடும்ப மேம்பாட்டு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதற்கு தகுதியுள்ள குழந்தைகளின் பெற்றோர் விண்ணப்பிக்க தேவையில்லை. LifeSG என்ற மொபைல் செயலியின் மூலம் தகுதியுடைய பெற்றோர்களுக்கு அவர்களின் வங்கி கணக்கிற்கு தானாகவே மானியமானது வழங்கப்படும்.
இந்த மானிய வவுச்சரானது இன்று முதல் (10/09/2025) தகுதியுடைய பெற்றோர்களுக்கு Large Family LifeSG கிரெடிட்டுகள் வழங்கப்பட உள்ளது.