நீரிழிவு நோயாளிகளுக்கு வந்தாச்சு புதிய சிகிச்சை முறை..!!! யாருக்கு அதிக பலன்..??

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் மிதமிஞ்சிய வயிற்றுக்கொழுப்பு கொண்ட நீரிழிவு நோயாளிகளுக்கு மின்காந்தத் துடிப்பு சிகிச்சை பலனளிப்பதாக சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகமும் பொது மருத்துவமனையும் இணைந்து நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
12 வாரங்கள் நீடித்த இந்த ஆய்வில் 40 டைப் 2 நீரிழிவு நோயாளிகள் பங்கேற்றனர்.
வாரத்திற்கு ஒருமுறை, ஒவ்வொரு நோயாளிக்கும் கால்களில் 10 நிமிடங்கள் வரை மின்காந்தத் துடிப்புகள் செலுத்தப்பட்டன.
குறைந்த அளவிலான துடிப்புகளைக் கொண்ட மின்காந்தப் புலங்களின் பயன்பாடு, உடலுக்குத் தெம்பு கொடுக்கும் ‘மைட்டோகாண்ட்ரியா’வைத் தூண்டுவதன் மூலம் உடற்பயிற்சி செய்ததற்கான ஆற்றலை வழங்குகிறது.
இதனால் மிதமிஞ்சிய வயிற்றுக்கொழுப்பு உடைவதால் நோயாளிகளுக்கு பலனளிக்கிறது.
சிகிச்சைக்கு முன்பும் பின்பும் மேற்கொள்ளப்பட்ட ரத்தப் பரிசோதனையில், வயிற்றுப் பருமன் கொண்ட நோயாளிகளின் HbA1c அளவு 7.5 இலிருந்து 7.1 ஆகக் குறைந்தது.
இது ஆரோக்கியமான ரத்த சர்க்கரை கட்டுப்பாட்டின் அளவான 6.5 முதல் 7 வரையிலான நிலைக்கு நெருக்கமானது.
ஆனால் பருமனற்ற நோயாளிகளில் மூவரில் ஒருவரிடம் மட்டுமே சிறிய முன்னேற்றம் காணப்பட்டது.
கிளினிக்கல் மெடிசின் மருத்துவ சஞ்சிகையில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு, உடல் பருமன் விகிதம் அதிகரித்து வரும் சிங்கப்பூரில் நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவக்கூடிய புதிய துணைச் சிகிச்சையாக கருதப்படுகிறது.
Follow us on : click here
Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship
WHATSAPP CHANNEL LINK
