இந்த அம்சத்தின் மூலம், உடல் நலம், பண விவரங்கள், தனிப்பட்ட பிரச்சினைகள் அல்லது அலுவலக ரகசியங்கள் போன்ற முக்கியமான விஷயங்களை, மற்றவர்கள் பார்க்க முடியாத பாதுகாப்பான சூழலில் ஏ.ஐ.யுடன் பகிர்ந்து பேச முடியும்.
இந்த அம்சம், மெட்டாவின் பிரைவேட் பிராசசிங் (Private Processing) தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது.
இதனால், பயனரின் உரையாடல்களை மெட்டா நிறுவனத்தால் கூட பார்க்க முடியாது. இதனுடன் சைட் சாட் (Side Chat) என்ற புதிய வசதியையும் மெட்டா விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.