சிங்கப்பூரில் சட்டவிரோத செயலில் ஈடுபட்டவர்கள் கைது..!! காவல்துறை அதிரடி..!!

சிங்கப்பூரில் சட்டவிரோத செயலில் ஈடுபட்டவர்கள் கைது..!! காவல்துறை அதிரடி..!!

சிங்கப்பூர்: நாடு முழுவதும் பல இடங்களில் காவல்துறை நடத்திய சோதனைகளில் சட்ட விரோதமாக குதிரைப் பந்தயத்தில் ஈடுபட்ட 29 வயது முதல் 87 வயதிற்கு உட்பட்டவர்களைக் காவல்துறை கைது செய்துள்ளது.

காவல்துறை நேற்று (மே 12) வெளியிட்ட அறிக்கையில் புலனாய்வு துறை மற்றும் ஏழு காவல் பிரிவுகளைச் சேர்ந்த 170 க்கும் மேற்பட்ட அதிகாரிகள், இந்த மாதம் (மே) 6-ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை ஜூரோங் வெஸ்ட், யிஷூன், ஹெலிகாங், ஆங் மோ கியோ மற்றும் பெடோக் உள்ளிட்ட பகுதிகளில் சோதனைகள் நடத்தியது.

அதில் 65 ஆண்களையும் 4 பெண்களையும் சட்டவிரோத செயலில் ஈடுபட்ட குற்றத்திற்காக சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக கூறியது.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து $50,000 அதிகமான ரொக்க பணமும், கைப்பேசிகள் மற்றும் குதிரைப் பந்தய உபகரணங்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

காவல்துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில், 69 பேர் இடைத்தரவர்களாக செயல்பட்டதும், மேலும் சட்டவிரோதமான பந்தயங்களை சேகரித்து வைத்ததும் தெரியவந்துள்ளது.சூதாட்ட கட்டுப்பாட்டுச் சட்டங்களை மீறியதாக சந்தேகத்தின் பேரில் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சூதாட்ட கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் உரிமம் இல்லாத சூதாட்டம் நடத்துநர்கள் மீது பந்தயம் கட்டுபவர்களுக்கு $10,000 வரை அபராதம் அல்லது 6 மாதங்கள் வரை சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

நடத்துநர்களாக சட்ட விரோத பந்தயச் சேவைகளை வழங்குபவர்களுக்கு $500,000 வரை அபராதமும், 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்படும்.

மேலும் இடைத்தரகர்களாக சட்டவிரோத பந்தய சேவைகளை வழங்குபவர்களுக்கு $200,000 வரை அபராதமும், 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் வழங்கப்படும்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK