சிங்கப்பூரில் அதிரடி ரெய்டு… 79 பேரை வலைவீசி கைது செய்த காவல்துறை..!!!
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (CNB) தீவு முழுவதும் நடத்திய அதிரடி சோதனை நடவடிக்கையில், $470,000க்கும் மேல் மதிப்புள்ள பல்வேறு போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த நடவடிக்கையில் சந்தேகத்திற்குரிய 79 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் இளம் சிங்கப்பூரர்கள் மற்றும் மலேசியர்கள் அடங்குவர்.
இந்த மாதம் 4 முதல் 8 ஆம் தேதி வரை அங் மோ கியோ, புக்கிட் பாடோக், ஜூரோங், பாசிர் ரிஸ், டாம்பனிஸ் மற்றும் யிஷுன் பகுதிகளில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்டவற்றில் கிட்டத்தட்ட 3.5 கிலோ ஹெராயின், 900 கிராம் மெத்தம்பேட்டமைன், கஞ்சா, எக்ஸ்டசி மாத்திரைகள், எரிமின்-5 மாத்திரைகள் மற்றும் டேட் ரேப் மருந்துகள் அடங்கும் என மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவினர்(CNB) தெரிவித்துள்ளனர்.