செராங்கூன் கார்டன்ஸில் உள்ள பிரபல உணவு மையம் மூடல்!! காரணம் என்ன??

செராங்கூன் கார்டன்ஸில் உள்ள பிரபல உணவு மையம் மூடல்!! காரணம் என்ன??

சிங்கப்பூர் செராங்கூன் கார்டன்ஸில் உள்ள சுங் சுங் உணவு மையமானது கடைசியாக 2017 ஆம் ஆண்டில் பழுது பார்க்கப்பட்டு கடை புதுப்பித்தல் நடந்தது.

அதைத்தொடர்ந்து நாளை(27/10/2025) முதல் (27/01/2026) வரை மூன்று மாத சீரமைப்பு பணி நடைபெறும் திட்டம் தொடங்க உள்ளதால் சில வியாபாரிகள் தங்கள் கடைகளை மூட தயாராகி வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.

இந்த உணவு மையத்தில் கிட்டத்தட்ட 36 கடைகள் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இதில் பெரும்பாலான கடைகள் வழக்கம் போல் இயங்கும் எனவும் கூறப்படுகிறது.

இதன்மூலம் கடைக்கு வரும் உணவு பிரியர்களை ஈர்க்கும் வகையில் வெளிப்புற சாப்பாட்டு பகுதியை மேம்படுத்த முடியும் என்றும் மேலும் வெளிபுற இருக்கைகளை இன்னும் சற்று அதிகரிக்க இந்த மறு சீரமைப்பு திட்டம் உதவியாக இருக்கும் என்றும் உணவு வியாபாரிகளும் வாடிக்கையாளர்களும் தங்களின் தனிப்பட்ட கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.