சிங்கப்பூர் வீடுகளில் வெடிகுண்டு காப்பறையில் இல்லப் பணிப்பெண்களா? வைரலான பதிவு கிளப்பிய சர்ச்சை.!!

சிங்கப்பூரில் வீடமைப்பு வளர்ச்சிக் கழக (HDB) வீடுகளில் அமைக்கப்பட்டுள்ள வெடிகுண்டுத் தாக்குதலுக்கான பாதுகாப்பு அறைகளில் (Bomb Shelter) இல்லப் பணிப்பெண்களைத் தங்க வைப்பது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் விவாதம் எழுந்துள்ளது.
சமீபத்தில் X சமூக வலைத்தளத்தில் ஒருவர் பகிர்ந்த பதிவு இந்த விவாதத்தைக் கிளப்பியுள்ளது. உள்ளூர் வணிக நிறுவனம் ஒன்றின் விளம்பரப் பொருள்கள் தொடர்பான படங்களும் பகிரப்பட்டதைத் தொடர்ந்து, இல்லப் பணிப்பெண்களின் தங்குமிட வசதிகள் குறித்த கேள்விகள் எழுந்துள்ளன.
சிங்கப்பூரில் பல HDB வீடுகளில் அவசரகாலப் பாதுகாப்புக்காக வெடிகுண்டு காப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இத்தகைய அறைகளைச் சிலர் இல்லப் பணிப்பெண்கள் தூங்குவதற்குப் பயன்படுத்துவதாகத் தெரியவந்துள்ளது. இதனால், அந்த அறையில் பணிப்பெண்களைத் தங்க வைப்பது முறையானதா என்ற விவாதம் தீவிரமடைந்துள்ளது.
சிங்கப்பூர் மனிதவள அமைச்சகத்தின் (MOM) விதிமுறைகளின்படி, இல்லப் பணிப்பெண்களுக்கு முதலாளிகள் பாதுகாப்பான தங்குமிடத்தை ஏற்பாடு செய்ய வேண்டும். அவர்கள் தங்கும் இடத்தில் போதுமான காற்றோட்டம் இருக்க வேண்டும். உடல்நலத்திற்கும் பாதுகாப்பிற்கும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய பொருள்கள் அருகில் இருக்கக்கூடாது.
மேலும், பணிப்பெண்களுக்குத் தேவையான மெத்தை, தலையணை, போர்வை போன்றவற்றை முதலாளிகள் வழங்க வேண்டும். குளியலறை வசதிகளுடன், அன்றாடம் பயன்படுத்தத் தேவையான சுகாதாரப் பொருள்களையும் ஏற்பாடு செய்ய வேண்டும்.

வீட்டில் கண்காணிப்புக் கேமராக்களைப் பொருத்த முதலாளிகள் முடிவு செய்தால், அதுகுறித்து இல்லப் பணிப்பெண்ணிடம் முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். அதேவேளையில், அவர்கள் தூங்கும் இடத்திலோ அல்லது ஆடை மாற்றும் இடத்திலோ கண்காணிப்புக் கேமராக்களைப் பொருத்தக் கூடாது.
இல்லப் பணிப்பெண்களின் பாதுகாப்பு, தனியுரிமை மற்றும் கண்ணியமான வாழ்க்கைச் சூழலை உறுதிப்படுத்துவது முதலாளிகளின் முக்கியப் பொறுப்பாகும். இந்த விவகாரம் மீண்டும் கவனம் பெற்றுள்ள நிலையில், பணிப்பெண்களுக்கான தங்குமிட வசதிகள் குறித்த விவாதம் சிங்கப்பூர் சமூக வலைத்தளங்களில் தொடர்கிறது.
Follow us on :
Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship
WHATSAPP CHANNEL LINK