HDB குடியிருப்பில் உள்ள குப்பைத் தொட்டியில் ஏற்பட்ட தீயை அணைத்த நபருக்கு குவியும் பாராட்டு..!!

HDB குடியிருப்பில் உள்ள குப்பைத் தொட்டியில் ஏற்பட்ட தீயை அணைத்த நபருக்கு குவியும் பாராட்டு..!!

சிங்கப்பூரில் கடந்த மாதம் பாசிர் ரிஸ் தெரு 13, பிளாக் 150-இல் உள்ள HDB அடுக்குமாடி குடியிருப்பின் குப்பை தொட்டிகளில் தீ விபத்து ஏற்பட்டது.

ஆனால் துணிச்சலாக குடிமை தற்காப்பு படையினர் வருவதற்கு முன்பாகவே டீயை அங்குள்ள பொதுமக்கள் பலர் அணைத்தனர். அதிர்ஷ்டவசமாக இந்த தீ விபத்து ஏற்பட்ட இடத்தில் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை.

தரை மட்டத்திலிருந்து குப்பைத்தொட்டிகளில் இருந்து பொருட்களில் மீது தீ பரவியதால் இந்த தீ விபத்தை ஏற்பட்டது குடிமை பாதுகாப்பு படை வருவதற்கு முன்பாகவே பொதுமக்கள் அணைத்தனர்.

தீயை அணைப்பதற்கு உதவிய மூன்று குடியிருப்பாளர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் அவர்களின் துணிச்சலை பாராட்டி, நேற்று (ஏப்ரல் 20) பாசிர் ரிஸ் சாங்கி GRC நாடாளுமன்ற உறுப்பினர் லீ நை யீ நேரில் சந்தித்து அவர்களுக்கு நன்றி தெரிவித்ததோடு பாராட்டு சான்றிதழ்களை வழங்கியதுடன் அதைப்பற்றி சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.

தீயை அணைக்க உதவியவர்களில் ஒருவர், அந்த நேரத்தில் உறவினர்களை சந்திக்க சென்றிருந்தார். அந்த குடும்பத்தினர் முதலில் நடமாடும் ஐஸ்கிரீம் விற்கும் வண்டியில் இருந்து மணியோசை கேட்டதாக நினைத்துள்ளனர். அதன் பிறகு அது தீ அணைக்க வருகின்ற வண்டியின் மணியோசை என்பதை உணர்ந்தனர்.

அந்த மூன்று பேரும் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று குடிமை பாதுகாப்பு படையினர் வருவதற்குள் அவர்களால் முயன்ற அனைத்தையும் செய்து விரைவாக தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தீயை அணைத்தவர்களில் ஒருவர் அன்று மற்றொரு சீனரும் தீயை அணைக்க உதவியதாகவும் அதன் பிறகு அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும் தெரியவந்துள்ளது.

பொது மக்களின் இந்த செயல்கள் ஆழ்ந்த தன்னலமற்ற தன்மையையும் வலுவான பொறுப்புணர்வையும் வெளிப்படுத்துவதாகவும் திரு லீ அவர்கள் கூறினார்.

தீயணைப்பு நடைமுறைகளை மேம்படுத்துவது குறித்த அவர்களின் ஆலோசனைகளையும் அவர் கேட்டறிந்தார். மேலும் தொடர்புடைய பதில் நடவடிக்கைகளை எவ்வாறு மேலும் செம்மைப்படுத்துவது என்பது குறித்து பாசிர் ரிஸ் சாங்கி நகர சபையுடன் இதைப்பற்றி விவாதிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK