மருத்துவமனை சுவரில் கார் மோதி விபத்து..!! எங்கே..??

மருத்துவமனை சுவரில் கார் மோதி விபத்து..!! எங்கே..??

சிங்கப்பூரில் சோவா சூ காங் பல்நோக்கு மருத்துவமனையின் நுழைவு வாயிலின் வெளியே உள்ள சுவரில் கார் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தானது நேற்று (ஏப்ரல் 20) காலை 7:00 மணி அளவில் நடந்துள்ளது. மருத்துவமனையின் நுழைவு வாயிலில், அறிவிப்புப் பலகை இருந்த கான்கரீட் சுவரில் ஒரு வெள்ளை நிற செடான் கார் மோதி உள்ளது.

இந்த விபத்து குறித்த காணொளியானது roadssg என்ற சமூக ஊடகப் பக்கமான instagramல் பதிவேற்றப்பட்டுள்ளது.

அந்த காணொளியில், நடைபாதையில் இருந்து விலகி சென்ற ஒரு வெள்ளை நிற செடான் காரின் முன் பகுதி “தேசிய பல்கலைக்கழக பலநோக்கு மருத்துவமனை ” (NUS) என்று எழுதப்பட்டிருந்த பலகை மீது மோதியுள்ளது. அதனால் காரின் முன் பகுதி சேதமடைந்திருப்பது தெரிகிறது.

விபத்து குறித்து காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்தக் காரின் ஓட்டுநரான 72 வயது பெண் காவல்துறையின் விசாரணைக்கு உதவி வருகிறார்.

காவல்துறை இந்த வழக்கு இன்னும் விசாரணையில் உள்ளதாக தெரிவித்துள்ளது. விபத்தில் ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.

காயம் ஏற்பட்டவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்த பொழுது அவர் மருத்துவமனை செல்வதற்கு மறுத்து விட்டதாக சிங்கப்பூர் குடிமைப் பாதுகாப்புப் படை (SCDF) தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக (NUS) பல்நோக்கு மருத்துவமனை குழுமத்தின் துணை நிறுவனமான சோவா சூ காங் பல்நோக்கு மருத்துவமனை டாக் வாய் பெண்டில் அமைந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து போக்குவரத்து காவல்துறையினர் உதவி வழங்குவதற்காக சம்பவ இடத்திற்கு வந்ததாகவும் NUS கூறியுள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK