சிங்கப்பூரில் கடல் துறை ஆய்வு மையம் புதிதாக வரவுள்ளது. தேசிய பூங்கா கழகம் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் (NUS) ஆகியவற்றின் மூலம் அமைக்கப்பட உள்ள இந்த புதிய ஆராய்ச்சி மையமானது, $60 மில்லியன் மதிப்பில் ஆராய்ச்சி மையமானது துவங்கவுள்ளது.
இந்த சிறப்பு ஆராய்ச்சி மையத்தின் மூலமாக சில கொள்கை முடிவுகளுக்கு முக்கியமான கடல் துறை அறிவியல் ஆராய்ச்சியானது மேம்படும் என்று கூறப்பட்டுள்ளது.
வளர்ச்சி, பருவநிலை மாற்றம் மற்றும் பல்லுயிர் இழப்பால் அதிகரிக்கும் சுற்றுச்சூழல் அழுத்தங்களுக்கு நடுவேன் சிங்கப்பூரின் கடல் மற்றும் கடலோர வளங்களை நிர்வாகிப்பதற்கான ஒரு ஒருங்கிணைந்த அறிவியல் அடிப்படையிலான அணுகு முறையை இந்த மையத்தின் மூலம் சாத்தியமாக முடியும் என்று உள்ளூர் நிலையங்களை சேர்ந்த விஞ்ஞானிகள் இந்த மாதம் (ஏப்ரல்) தெரிவித்துள்ளனர்.
2100 ஆம் ஆண்டிற்குள் சிங்கப்பூரினுடைய கடல் மட்டமானது 1.15 மீட்டர் வரை உயரும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது. இது நிலம் மீட்பு மற்றும் பிற வழிகள் மூலம் கடலோர பாதுகாப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான ஒரு முயற்சியாக அமையும்.
2026 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டு விவாதத்தின் போது அறிவிக்கப்பட்டிருந்த ஆராய்ச்சி மையம் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தால் நிர்வகிக்கப்படும். மேலும் இதுகுறித்த கூடுதல் விவரங்கள் இந்த ஆண்டில் (2026) வெளியிடப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்த மையம் பல்கலைக்கழகங்கள் அரசாங்க அமைப்புகள் தொழில்துறை நிபுணர்கள் மற்றும் கொள்கை நிலையங்களை ஒன்றிணைக்கும் என தேசிய பூங்காக் கழகத்தின் தேசிய பல்லுயிர் மையக் குழுமத்தின் இயக்குனரான கேரன் டன் தெரிவித்துள்ளார்.
கடல் அறிவியல் ஆராய்ச்சியை முன்னெடுத்து செல்வதற்கு தற்போது உள்ள கடற்கரை அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்கள் உட்பட முக்கிய பங்குதாரர்களிடையே இது ஓர் ஒருங்கிணைந்த பார்வையை வழங்கும் என்று பவளப்பாறை உயிரியல் ஆய்வாளரான டாக்டர் டன் கூறினார்.
சிங்கப்பூரினுடைய கடலோரப் பகுதிகளை தாண்டி வெளிநாட்டு ஆராய்ச்சி நிறுவனங்கள் உடனான வட்டார ஒத்துழைப்பில் இந்த கடல் துறை ஆய்வு மையம் அதிக கவனம் செலுத்த உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இது தென்கிழக்கு ஆசியா முழுவதிலும் உள்ள கடல் ஆரோக்கியத்தின் ஒப்பீட்டு மதிப்புகளையும் வட்டாரத்தில் இணைக்கப்பட்ட நீர்நிலைகள் பற்றிய கூட்டு புரிதலையும் எளிதாக்கும் ஒரு வாய்ப்பாக அமையும் எனவும் தெரியவந்துள்ளது.