Hereசர்வதேச விமான சேவைகளில் சிக்கல்..!!12 லட்சம் பயணிகள் பாதிப்பு..!!
மேற்காசிய போர் காரணமாக 12 லட்சம் சர்வதேச பயணிகளை இந்திய விமான நிறுவனங்கள் இழந்து இருக்கின்றன.
மேற்காசிய மோதலால் பல நாடுகளில் வான்வெளி மற்றும் விமான நிலைய செயல்பாடுகள் பாதிக்கப்பட்டன. இதன் காரணமாக இந்திய விமான நிறுவனங்கள் சில சர்வதேச விமானங்களை ரத்து செய்யவும் சில சேவைகளின் பாதைகளை மாற்றவும் கட்டாயப்படுத்தப்பட்டன.
இதனால் விமான பயண நேரங்கள் அதிகரித்ததுடன் மட்டுமல்லாமல் எரிபொருள் மற்றும் செயல்பாட்டு செலவுகளும் உயர்ந்துள்ளன.
இதன் விளைவாக இந்திய விமான நிறுவனங்கள் ஏப்ரல் மாதத்தில் மட்டும் சுமார் 12 லட்சம் சர்வதேச பயணிகளை இழந்துள்ளது. விமானத்துறை ஆய்வு நிறுவனமான “எக்விரஸ்” வெளியிட்ட அறிக்கையின்படி இந்த தகவல்கள் வெளிவந்துள்ளது.
மேலும் இந்திய விமான நிறுவனங்களின் சர்வதேச பயணிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டு (2025) ஏப்ரலில் 30 லட்சம் ஆக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு (2026 ஏப்ரல் 18 லட்சமாக குறைந்துள்ளது. இது 30% வீழ்ச்சியை குறிக்கிறது.
உள்நாட்டு மற்றும் சர்வதேச சேவைகளை சேர்த்து இந்திய விமான நிறுவனங்கள் ஏப்ரல் மாதத்தில் 1.57 கோடி பயணிகளை ஏற்றி சென்றுள்ளன. அதே கடந்த ஆண்டு (2025) இதே மாதத்தில் 1.74 கோடி பயணிகளைப் பயணம் செய்திருந்த நிலையில் மொத்தம் பயணிகள் போக்குவரத்து 10% குறைந்துள்ளது.
உள்நாட்டு பயணிகள் எண்ணிக்கை 3% மட்டுமே குறைந்து 1.39 கோடியாக இருந்ததால் பாதிப்பு பெரும்பாலும் சர்வதேச சேவைகளில் ஏற்பட்டுள்ளதாக அறிக்கை குறிப்பிடுகிறது. ஏப்ரல் மாதத்தில் இந்திய விமான நிறுவனங்களின் சர்வதேச விமான புறப்பாடுகள் 37 % குறைந்து 18,400 இல் இருந்து 11,700 ஆக குறைந்துள்ளது.
பயணிகள் தேவையும் குறைந்துள்ளதால் பயணிகள் போக்குவரத்தை அளவிடும் வருவாய் பயணிகள் கிலோமீட்டர் 33% குறைந்து 10.7 பில்லியனில் இருந்து 7.2 பில்லியன் ஆக குறைந்துள்ளது.
உலகின் பிற பகுதிகளில் சர்வதேச பயணிகளின் சேவை 1.90 % வளர்ச்சி கண்டுள்ளது. இதனால் தற்போதைய வீழ்ச்சிக்கு மேற்காசிய மோதலே முக்கிய காரணமாக உள்ளது என்பது தெரிகிறது.