முதலமைச்சர் விஜய் முன்னிலையில் முக்கிய ஒப்பந்தம்…!! 8,200 பேருக்கு புதிய வேலைவாய்ப்பு..!!

முதலமைச்சர் விஜய் முன்னிலையில் முக்கிய ஒப்பந்தம்...!! 8,200 பேருக்கு புதிய வேலைவாய்ப்பு..!!

தமிழகத்தில் எல் அண்டு டி நிறுவனம் பார் திட்டங்களில் ரூ.18,600 கோடி முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமானது முதலமைச்சர் விஜய் முன்னிலையில் கையெழுத்தாகியுள்ளது.

சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் விஜய் நேற்று (ஜூன் 4) பொறியியல், கட்டுமானம், உற்பத்தி மற்றும் தொழில்நுட்பக் குழு மங்களில் ஒன்றான லார்சன் அண்டு டூப்ரோ நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனரான எஸ்.என். சுப்பிரமணியுடன் கலந்துரையாடினார்.

தமிழ்நாட்டில் இந்நிறுவனம் தொடர்ந்து முதலீடுகள் செய்து வருகின்றன.தொழில்துறையில் மிகவும் வலுவான இடத்தை பதித்து பல துறைகளில் மேலும் ரூ.18,600 கோடி முதலிடம் 2200 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 3 திட்டங்களை தமிழகத்தில் அமைக்க உள்ளதாக நிறுவனத்தின் தலைவர் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் இந்நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சி மற்றும் விரிவாக்கத் திட்டங்களுக்கு மாநில அரசின் முழுமையான ஒத்துழைப்பும் ஆதரவும் தொடர்ந்து வழங்கப்படும் என்று முதலமைச்சர் உறுதியளித்துள்ளார்.

இந்த சந்திப்பில் லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனம் தமிழ்நாடு அரசுடன் இந் திட்டங்களை மேற்கொள்ள உள்ளதாக முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்த மேற்கொண்டுள்ளது.அந்தத் திட்டங்கள் பின்வருமாறு:
👉காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரூ.15,000 கோடி முதலீட்டில் 500 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் தகவல் தரவு மையம் விரிவாக்க திட்டம்

👉கோவையில் ரூ.2,500 கோடி முதலீட்டில் 2000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் மின்னணுப் பொருட்கள் மற்றும் மின்னணு அமைப்புகள் உற்பத்தி திட்டம்

👉திருவள்ளூர் மாவட்டத்தில் ரூ.1,100 கோடி முதலீட்டில் 5700 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில்  காட்டுப்பள்ளி எல் அண்டு டி கப்பல் கட்டும்தளம் விரிவாக்க திட்டம்

2030 ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 1.5 டில்லியன் டாலராக உயர்த்த வேண்டும் என்பதற்கான மைல் கல்லாக இந்த முதலீடு அமைந்துள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த முதலீடுகளின் மூலம் மாநிலத்தில் டிஜிட்டல் உள்கட்டமைப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு செயல்பாடுகள் வளர்ச்சி பெறுவதுடன் மட்டுமல்லாமல் மின்னணுவியல் உற்பத்தி சூழல் அமைப்பு மேம்படும்.

மேலும் காட்டுப்பள்ளி திட்டம், கடலோர காற்றாலை கட்டுருவாக்கத் தொழில்களுக்கு உலகத்தரமாய் இந்த உள்கட்டமைப்பு கொண்டு வரப்படும். இந்த திட்டங்கள் செயல்படுத்தப்படுவதன் மூலம் தமிழ்நாட்டில் இளைஞர்கள் பெரிய அளவிலான நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படுவதன் மாநிலத்தின் பொருளாதரமும் மேம்படும்.

முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின்னர் தொழில்துறையில் மேற்கொள்ளப்படும் முதல் புரிந்துணர்வு ஒப்பந்தம் இதுவே என்பது குறிப்பிடத்தக்கது. இதில் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா மற்றும் தலைமை செயலாளர் சாய் குமார் மற்றும் பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK