சிங்கப்பூர் செல்வதற்கு டெஸ்ட் அடிப்பதில் உள்ள பிரச்சனைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா??
தற்பொழுது சிங்கப்பூர் செல்வதற்கு டெஸ்ட் அடிப்பது மீண்டும் ஆரம்பமாகிவிட்டது என்று பலரும் அறிந்ததே. இதில் தற்பொழுது பலரும் சந்திக்கும் பிரச்சனைகள் என்னவென்று இந்த பதிவில் பார்க்கலாம்.
1. புதிதாக செல்பவர்களுக்கு மட்டுமே அனுமதி!
தற்பொழுது டெஸ்ட் அடிப்பதில் மிகவும் முக்கியமான பிரச்சனை என்னவென்றால் டெஸ்ட் அடிக்க செல்பவர்கள் இதற்கு முன் சிங்கப்பூர் சென்று இருக்கக் கூடாது என்பதுதான். இதனால் ஏற்கனவே சிங்கப்பூருக்கு வேற பாஸில் வேலைக்கு சென்று வந்தவர்கள் டெஸ்ட் அடிக்க முடியாத சூழ்நிலை நிலவுகிறது.
இதற்கான காரணம் நீங்கள் வேற PASS-இல் சென்று வந்து உங்களுக்கு புதிதாக டெஸ்ட் அடிப்பதற்காக விண்ணப்பிக்கும் பொழுது அது மனிதவள அமைச்சு(MOM) அல்லது BCAவில் நிராகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் அந்த கம்பெனியில் கோட்டா பாதிக்கும் என்பதால் புதிதாக சிங்கப்பூர் செல்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன.
2. வயதுவரம்பு!
புதிதாக டெஸ்ட் அடிப்பதற்கான வயது வரம்பு 21 வயதிலிருந்து 35 வயது வரை மட்டுமே ஆகும். இது ட்ரெயினிங் கொடுக்கும் இன்ஸ்டியூட் மூலம் நிர்ணயிக்கப்படுவது. இதனால் 35 வயதிற்கு மேல் உள்ளவர்கள் டெஸ்ட் அடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
3. டெஸ்ட் அடிப்பதற்கான பிரிவுகள்! முன்பெல்லாம் நீங்கள் டெஸ்ட் அடிக்க சென்றால் உங்களுக்கு பல வித தேர்வுகள் இருக்கும். உதாரணத்துக்கு நீங்கள் எலக்ட்ரிக்கல் சம்பந்தமாக படித்திருந்தால் எலக்ட்ரிக்கல் டெஸ்ட் அடிக்கலாம், சிவில் இன்ஜினியரிங் படித்து இருந்தால் ஸ்டீல் டெஸ்ட் அடிக்கலாம். இதுபோல் பல தேர்வுகள் இருந்தது ஆனால் இப்பொழுது இது போல் உங்களால் தேர்வு செய்ய முடியாது.
4. நேரம்! தற்பொழுது டெஸ்ட் அடிப்பதற்கான காலம் சற்று அதிகமாகவே இருக்கிறது என்று சொல்லலாம். நீங்கள் அட்மிஷன் போட்ட உடனேயே டெஸ்ட் அடித்து விட்டு சிங்கப்பூர் செல்ல முடியாது. குறைந்தது 2 மாதமாவது நீங்கள் சிங்கப்பூர் செல்ல காலம் ஆகலாம். அதே போல் அங்கு சென்று தான் நீங்கள் டெஸ்ட் அடிக்க வேண்டும்.
5. ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும்! முன்பெல்லாம் படிக்காதவர்கள் கூட டெஸ்ட் அடித்து சிங்கப்பூர் செல்ல முடியும். ஆனால் இப்பொழுது படிக்காதவர்களால் சிங்கப்பூர் செல்ல முடியாது என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. ஏனென்றால் அங்கு சென்று நீங்கள் உங்களுக்கான பாதுகாப்பு பரீட்சையை எழுதும் பொழுது அதில் பெயிலாகி விடுவீர்கள். அதே போல் பல நாட்டவர்கள் வேலை செய்யும் கம்பெனியில் ஆங்கிலம் தெரியாமல் உங்களால் வேலை செய்ய முடியாது என்பதாலும் ஆங்கிலம் பேச மற்றும் எழுதத் தெரிந்தவர்கள் தேர்வு செய்கின்றனர். இதனால் படிக்கத் தெரியாதவர்கள் சிங்கப்பூர் செல்வதில் குறிப்பாக டெஸ்ட் அடித்து விட்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
6. பணம்! டெஸ்ட் எடுப்பதற்கு நீங்கள் செலுத்த வேண்டிய தொகை 4 லிருந்து 5 1/2 லட்சம் வரை ஆகிறது. இது சாமானியர்களால் செலுத்த முடியாத தொகையாக உள்ளது. அதேபோல் அதற்கான சம்பளமும் மிகவும் குறைவாகவே உள்ளது. நீங்கள் சிங்கப்பூர் சென்று 15 வருடம் அங்கு இருக்கலாம் என்ற நிலை இருந்தாலும் இந்த தொகை சாமானியருக்கு சற்று கடினமாகவே உள்ளது.
நம்முடைய அடுத்த பதிவு இதை அனைத்தையும் தாண்டி நாம் ஏன் டெஸ்ட் வைத்து சிங்கப்பூர் செல்ல வேண்டும் டெஸ்ட் அடித்து சிங்கப்பூரில் வேலை செய்வதில் உள்ள நன்மைகள் என்ன என்று பார்க்கலாம்.
இதுபோன்று சிங்கப்பூர் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள தொடர்ந்து நமது முகநூல் பக்கம், இன்ஸ்டாகிராம் மற்றும் இணைய பக்கத்தில் இணைந்து இருங்கள்.