மலேசியா செல்கிறார் பிரதமர் லாரன்ஸ் வோங்..!! காரணம்..??

மலேசியா செல்கிறார் பிரதமர் லாரன்ஸ் வோங்..!! காரணம்..??

சிங்கப்பூர்:சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் இன்று (20.02.26) மலேசியாவிற்குப் பயணம் மேற்கொள்ள உள்ளார். மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் அவர்களின் அழைப்பை ஏற்றே இந்த பயணம் மேற்கொள்ளப்படுகிறது.

மலேசியப் பிரதமர் நடத்தும் நோன்புத் துறப்பு நிகழ்ச்சியில் திரு.லாரன்ஸ் வோங் கலந்து கொள்ளவுள்ளார் என சிங்கப்பூரின் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்தச் சந்திப்பு இருநாட்டு நட்புறவை மேலும் வலுப்படுத்தும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.

சந்திப்பின் போது இருதரப்பு ஒத்துழைப்பு, பொருளாதார முன்னேற்றம் மற்றும் பொதுவான அக்கறை கொண்ட பிராந்திய மற்றும் சர்வதேச அம்சங்கள் குறித்து கலந்துரையாடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகும் என மலேசிய வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால ஒத்துழைப்பை இது மேலும் உறுதிப்படுத்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.

சந்திப்பை முடித்துவிட்டு திரு.லாரன்ஸ் வோங் இன்றே சிங்கப்பூர் திரும்பவுள்ளார். இந்த விஜயம், சிங்கப்பூர்–மலேசிய உறவை மேலும் வலுப்படுத்தும் ஒரு முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK