4 மில்லியன் சிங்கப்பூர் வெள்ளி அபராதம் பெற்ற நபர் ஏன் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!!

4 மில்லியன் சிங்கப்பூர் வெள்ளி அபராதம் பெற்ற நபர் ஏன் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!!

4 மில்லியன் சிங்கப்பூர் வெள்ளி அபராதம் பெற்ற நபர் ஏன் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!

சிங்கப்பூரில் 32 வயதான எரிக் டான் ஸி ஹொவ் எனும் ஆடவர் அவர் இறக்குமதி செய்யப்பட்ட கார்களின் மதிப்பு குறித்து சிங்கப்பூர் சுங்கத்துரையிடம் தவறான தகவல் அளித்ததற்காக ஜூலை 8 தேதி தண்டனை விதிக்கப்பட்டது.

இதற்கு முன்பாக சுங்க தீர்வை, பொருள் சேவை வரி ஏய்ப்பு, குற்ற செயல் மூலம் ஈட்டிய கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றியது, நீதித்துறையின் செயல்பாட்டுக்கு இடையூறு விளைவித்தது ஆகியவற்றை அவர் ஒப்புக்கொண்டார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்து மேலும் மூன்று பேருடன் சேர்ந்து இறக்குமதியாகும் வாகனங்களின் மதிப்பை அதிகாரிகளிடம் குறைவாக தெரிவிக்கும் சதி திட்டத்தை அவர் திட்டி உள்ளார்.

இதில் இரண்டு நிறுவனங்களும் உடந்தையாக இருந்துள்ளது.

இது போன்ற குற்றச்செயல் வாயிலாக 485 வாகனங்கள் சிங்கப்பூர் சுங்கத்துறையிடம் தவறான தகவல்களை தெரிவித்தது அதன் மொத்த மதிப்பு 3,532,170.48 மில்லியன் ஆகும்.

அந்த 485 வாகனங்களில் 190 கார்களுக்கு தவறான தகவல் தெரிவிப்பதற்கு டானின் ஈகிள் 9 நிறுவனம் உடந்தையாக இருந்தது.

தான் சதி திட்டத்தில் அவரது பங்கு தொடர்பான ஆதாரங்கள் இருந்த கைப்பேசியை வீசி எறிந்து விட்டார். அது நீதித்துறையின் செயல்பாட்டுக்கு இடையூறு விளைவிக்கும் செயல், வழக்கில் தொடர்புடைய மேலும் மூவர் மீதான விசாரணை தொடர்கிறது.

இது தொடர்பாக டானுக்கு ஜூலை எட்டாம் தேதி நான்கு மாதங்கள் சிறை தண்டனையும் 4,194,000 மில்லியன் அபராதமும் விதிக்கப்பட்டது.

அவர் அபராத தொகையை செலுத்த தவறினால் கூடுதலாக 44 மாதங்கள் சிறை தண்டனையை நிறைவேற்ற நேரிடும்.

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan