பரபரப்பு…!!! பொது இடத்தில் நடந்த அதிர்ச்சி தாக்குதல்..!!

பரபரப்பு...!!! பொது இடத்தில் நடந்த அதிர்ச்சி தாக்குதல்..!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் பாசிர் பாஞ்சாங் சாலைப் பகுதியில் நடந்த அதிரடி சம்பவம் அங்கிருந்த மக்களை பதற்றத்தில் ஆழ்த்தியது.

32 வயது மதிக்கத்தக்க பெண், சமையலறை கத்தியால் தாக்கப்பட்டதில், தலை மற்றும் இடது கையில் கடுமையான காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அதிர்ஷ்டவசமாக, அவர் சுயநினைவுடன் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் தொடர்புடைய 43 வயதுடைய நபர் சம்பவம் நடந்தவுடன் அந்த இடத்தை விட்டு தப்பிச் சென்றார்.

ஆனால், போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, விசாரணையை விரைவுபடுத்தி, வெறும் 11 மணி நேரத்திலேயே சந்தேக நபரை அடையாளம் கண்டு கைது செய்தனர்.

போலீசார் வெளியிட்ட அறிக்கையில், நேற்று (19.09.25) காலை 11:20 மணியளவில் ஆதரவு கோரி அழைப்பு வந்ததாகவும், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றதாகவும் கூறப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட அந்த நபர் மீது இன்று (20.09.25) நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அவர் மீது ஆபத்தான ஆயுதம் ஏந்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த குற்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு அதிகபட்சம் ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை, அபராதம், பிரம்படி அல்லது இவற்றின் கலவையான தண்டனை விதிக்கப்படலாம் என போலீசார் எச்சரித்துள்ளனர்.

 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan