பெண் கொடுத்த அதிர்ச்சி புகார்… கம்பி எண்ணும் விடுதி ஊழியர்..!!
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் உள்ள விடுதியில் இளைஞர் ஒருவர் பெண் விருந்தினரை வலுக்கட்டாயமாக முத்தமிட்டு பாலியல் தொந்தரவு செய்த சம்பவத்தில்,அந்த விடுதியின் முன்னாள் ஊழியருக்கு நீதிமன்றம் மூன்று ஆண்டுகள் பத்து மாத சிறைத்தண்டனையும் ஆறு பிரம்படிகளும் விதித்துள்ளது.
இந்த சம்பவம் கடந்த ஆண்டு மார்ச் 22 ஆம் தேதி மாலை, டான் கியூ லான் தெருவில் அமைந்துள்ள தி ரூம்@புகிஸ் பேக் பேக்கர் விடுதியில் நடைபெற்றது.குற்றம் சாட்டப்பட்ட 42 வயதான வங்கதேச நாட்டைச் சேர்ந்த இஸ்லாம் அமினுல், அங்கு சுத்தம் மற்றும் உணவு ஏற்பாடுகளுக்குப் பொறுப்பான ஊழியராக பணியாற்றி வந்தார்.
பாதிக்கப்பட்ட பெண் அந்த விடுதியில் விருந்தினராக தங்கியிருந்தார். சம்பவம் நடந்த நாளில், அவர் ஓய்வெடுத்து கொண்டிருந்த அறைக்குள் ஊழியர் வந்தபோது, பின்னர் லாபியில் காத்திருந்த பெண்ணிடம் அவர் பேசுவதாக கூறி அணுகினார்.
அப்போது அவர் திடீரென வெளியேறும் வழியை மறித்து, வலுக்கட்டாயமாக முத்தமிட்டதுடன், பெண்ணின் உடலின் பல பகுதிகளையும் தகாத முறையில் தொட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் அதே நாள் மாலை போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தி ஒரு மணி நேரத்திற்குள் அந்த ஊழியரை கைது செய்தனர். பின்னர் விடுதி நிர்வாகமும் அவரை பணிநீக்கம் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.