சிங்கப்பூர் மழலையர் பள்ளியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!!
சிங்கப்பூர்: மவுண்ட்பேட்டனில் உள்ள PCF மழலையர் பள்ளியில் உணவில் விஷம் கலந்துள்ளதாக சந்தேகிக்கப்படும் தகவல் வெளியானது.
தொற்று நோய்கள் மேலாண்மை நிறுவனம் ஆரம்பகால குழந்தை மேம்பாட்டு நிறுவனம் மற்றும் உணவு நிறுவனம் ஆகியவை இணைந்து ஒரு கூட்டறிக்கை வெளியிட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை(23ஆம் தேதி) முதல் திங்கள்கிழமை தினம் (25ஆம் தேதி) வரை மௌண்ட்பேட்டனில் உள்ள பிளாக் 92 இன் தரைத்தளத்தில் உள்ள ஸ்பார்க்லெடாட்ஸ் பாலர் மையத்தில் மொத்தம் 24 மாணவர்கள் மற்றும் இரண்டு ஊழியர்கள் இரைப்பை குடல் அலர்ஜியின் அறிகுறிகளை கொண்டிருந்தனர்.
அவர்களில் யாருக்கும் மருத்துவமனை அனுமதிக்கும் அளவுக்கு ஆபத்து ஏற்படவில்லை. மேலும் அனைவரும் குணமடைந்து 26 ஆம் தேதி பள்ளிக்கு திரும்பி உள்ளனர்.
பாலர் பள்ளி மையங்களில் உணவு பாதுகாப்பு தரங்களை வலுப்படுத்தவும் உணவுப் பணியகம் ஆரம்பக் குழந்தை பருவம் மேம்பாட்டு நிறுவனத்துடன் நெருக்கமாக செயல்பட்டு வருகிறது.
ஆரம்பகால குழந்தை பருவம் மேம்பாட்டு நிறுவனம் நிலைமையை கண்காணித்து மாணவர்களின் ஆரோக்கியத்தை உறுதி செய்வதற்காக வணிகங்களுடன் இணைந்து பணியாற்றி வருவதாக கூறியுள்ளது.
மேலும் தொற்று நோய்களை தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் பொருத்தமான வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு வணிகங்களுக்கு நிறுவனம் நினைவூட்டியுள்ளது.