சாங்கி டிராவல் சர்வீஸ்(CTS) வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…!!!!

சாங்கி டிராவல் சர்வீஸ்(CTS) வெளியிட்ட அதிர்ச்சி தகவல்...!!!!

CTS நிறுவனம் 2012 ஆம் ஆண்டு சாங்கி விமான நிலைய குழுமத்தின் துணை நிறுவனமாக நிறுவப்பட்டது. மேலும் பல்வேறு பிராண்டுகளான, சாங்கி பரிந்துரைகள் பயணப் பரிந்துரைகள் மற்றும் சாங்கிஎஃப்எக்ஸ் போன்றவற்றை இயக்குகிறது.

கடந்த செப்டம்பர் மாதம் வரை, சந்தை நுண்ணறிவு போர்டல் EMIS-ஐ ஆய்வு செய்தபோது CTS இல் 80 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மட்டுமே இருந்ததாக காட்டியது.

இது குறித்து வெள்ளிக்கிழமை ஆகஸ்ட் 22 CNAவின் கேள்விகளுக்கு பதில் அளித்த CTS நிறுவனசெய்தி தொடர்பாளர் கூறியது:
வணிக மற்றும் செயல்பாட்டு மறு சீரமைப்பின் ஒரு பகுதியாக சுமார் 30 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளது.

நிறுவனத்தின் இந்த முடிவு நிதானமாக பரிசீளித்த பிறகு எடுக்கப்பட்டது எனவும், CTS இன் நிலையை மேலும் வலுப்படுத்தப் போவதாகவும், நிலையான வளர்ச்சியை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டு எடுக்கப்பட்டது என்றும் கூறினார்.

பாதிக்கப்பட்ட ஊழியர்கள் ஒவ்வொரு வருட சேவைக்கும் நான்கு வாரங்கள் பணிநீக்கம் பெறுவார்கள் குறைந்தபட்ச சேவை காலம் எதுவும் இருக்காது.

பணியிடை நீக்கம் செய்த நபர்களுக்கு சாங்கி விமான நிலையம் மற்றும் பிற இடங்களில் பொருத்தமான வேலை காலியிடங்களை கண்டறிய நிறுவனம் உதவும் என்று செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

வைஃபை ரவுட்டர்கள், சிம் கார்டுகள் மற்றும் விமான நிலைய இடமாற்றங்கள் போன்ற பயண சேவைகளை வழங்கும் இந்த CTS நிறுவனமானது, “வளர்ந்து வரும் சந்தை நிலைகளுக்கு ஏற்பவும் மூலோபாய மதிப்பாய்வுகளுக்குப் பிறகும்” இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறியது.

 

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan