அதிர்ச்சி சம்பவம்..!!! பள்ளிக்குச் செல்ல அஞ்சும் 3ஆம் வகுப்பு மாணவி..!! என்ன நடந்தது..??? தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதுமாக படிக்கவும்..!!
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் 3ஆம் வகுப்பு படிக்கும் மாணவி, மூன்று ஆண் வகுப்பு தோழர்களால் நீண்டகாலமாக வாய்மொழி மற்றும் உடல் ரீதியான கொடுமைக்கு உள்ளானதாக 39 வயதான தாய் யின் நி புகார் அளித்துள்ளார்.
மாணவி மீது அடிக்கடி தள்ளுதல், உடைமைகளை அழித்தல், சம்மதமின்றி கட்டிப்பிடித்து “காதலி” என்று அழைப்பது போன்ற தவறுகள் நடந்ததாக கூறப்படுகிறது. ஜூலை 24 அன்று மோதலின் போது சிறுமி தாக்கப்பட்டதும், பின்னர் தொந்தரவு தரும் அழைப்புகளும், கொலை மிரட்டல்களும் வந்ததாக தாய் தெரிவித்தார்.
புகார் அளித்ததைத் தொடர்ந்து மூன்று மாணவர்களுக்கு 1 முதல் 3 நாள் இடைநீக்கம் வழங்கப்பட்டது. ஆனால், ஆகஸ்ட் மாதத்திலும் அதே சிறுவன் மீண்டும் தாக்க முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தாக்குதலில் சிறுமி காயமடைந்ததை மருத்துவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
தொடர்ந்த அச்சத்தால் சிறுமி ஒரு வாரமாக பள்ளிக்கு செல்லாமல் உளவியல் ஆலோசனை பெற்று வருகிறாள். தாய் தனது மகளை வேறு பள்ளிக்கு மாற்றவும், சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
பள்ளி தரப்பில், பாதிக்கப்பட்ட மாணவிக்கும் ஆதரவு வழங்கப்பட்டு வருவதாகவும், சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு இடைநீக்கம், ஆலோசனை ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் கூறியுள்ளது. காவல்துறையும் புகாரைப் பெற்று விசாரணை நடத்தி வருகிறது.