சிங்கப்பூர் துணை அமைச்சர் நியமனம்..!!

சிங்கப்பூர் துணை அமைச்சர் நியமனம்..!!

சிங்கப்பூரில் நாடாளுமன்ற உறுப்பினர் சூல்கர்னைன் அப்துல் ரஹீம் துணை அமைச்சராக வரும் ஜனவரி முதல் தேதி நியமிக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

45 வயதை சேர்ந்த அப்துல் ரஹீம் சட்ட நிறுவனம் ஒன்றில் முக்கிய பங்கு வகித்து வருகிறார்.

இங்கு தனது கடமைகளை முன்கூட்டியே நிறைவு செய்துள்ளதால் தற்போது இந்த தேதி நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இல்லையேல் அடுத்த ஆண்டு பிப்ரவரி முதல் தேதியில் தான் துணை அமைச்சராக நியமிக்கப்பட உள்ளதாக திட்டமிடப்பட்டிருந்தது.

திரு அப்துல் ரஹீம் வெளியுறவு அமைச்சிலும் சமுதாய குடும்ப மேம்பாட்டு அமைச்சிலும் துணை அமைச்சராக பொறுப்பு வகிப்பார்.

2020 பொது தேர்தலில் இருந்து அவர் சுவா சூ காங் குழு தொகுதியின் உடைய நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார்.

சென்ற ஆண்டு ஜூலை மாதம் இவர் உள்துறை சட்டம் ஆகியவற்றிற்கான அரசாங்க நாடாளுமன்ற குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK