சிங்கப்பூர் GDP அப்டேட் குறித்த தேதி வெளியீடு..!!

சிங்கப்பூர் GDP அப்டேட் குறித்த தேதி வெளியீடு..!!

சிங்கப்பூர்:2025 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டிற்கான சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) தரவு வரும் 21 நவம்பர், வெள்ளிக்கிழமை காலை 8:00 மணிக்கு வெளியிடப்பட உள்ளது.

வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம், புள்ளிவிவரத் துறை,மேலும் சிங்கப்பூர் தகவல் மையத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளங்கள் மூலமாக தொடர்புடைய அறிக்கைகள் பொதுமக்களுக்கு வழங்கப்படும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

முழுமையான GDP அறிக்கை சர்வதேச வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் வலைத்தளத்தில் பதிவேற்றப்படும்.

பொதுவாக முதலீட்டாளர்கள்,ஆய்வாளர்கள் மற்றும் பொருளாதார நிபுணர்கள் அதிகம் கவனிக்கும் காலாண்டு தரவாக இது கருதப்படுகிறது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK