அசத்தல்..!!!பிரம்மாண்ட வெற்றிகளை பதிவு செய்து வரும் சிங்கப்பூர்…!!

அசத்தல்..!!!பிரம்மாண்ட வெற்றிகளை பதிவு செய்து வரும் சிங்கப்பூர்...!!

தாய்லாந்தில் நடைபெற்று வரும் 33வது தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் சிங்கப்பூர் பிரமாண்ட வெற்றியை பதிவு செய்து வருகிறது.

இதுவரை நடந்த போட்டிகளில் 5 தங்கம், 4 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 15 பதக்கங்களைப் பெற்றுள்ளதால் பதக்கப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது.

குறிப்பாக நேற்றைய நாள்,டேக்வாண்டோ, நீச்சல், ஜூ ஜிட்சு, படகோட்டம் ஆகிய நான்கு துறைகளிலும் தொடர்ந்து தங்கம் வென்று சிங்கப்பூர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

டேக்வாண்டோ போட்டியில் Mixed Poomsae பிரிவில் தியானா அகிதா மற்றும் நிக்கலஸ் காவ் இணைந்து துல்லியமான அசைவுகளால் வியட்நாமை வீழ்த்தினர்.

ஜூ ஜிட்சு போட்டியில் 77 கிலோ பிரிவில் 18 வயது ஜெட் டான் தாய்லாந்து வீரரை 16–9 என்ற கணக்கில் வெற்றிகொண்டார்.

ஆண்களுக்கான 100 மீட்டர் Freestyle நீச்சல் போட்டியில் மிக்கல் லீ 48.65 வினாடிகளில் நீந்தி தங்கப்பதக்கம் வென்றார்.

பெண்களுக்கான Breaststroke 50 மீட்டர் நீச்சல் போட்டியில் லெட்டிஷியா சிம் 31.03 விநாடிகளில் நீந்தி புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார்.

படகோட்ட போட்டியில் Mixed Kayak Double 500 மீட்டரில் ஸ்டீபெனி சென் மற்றும் லூக்கஸ் தீயோ இணைந்து 1:49.086 என்ற நேரத்தில் எதிரிகளை பின்னுக்கு தள்ளி தங்கப் பதக்கத்தை பெற்றனர்.

இன்று(11.12.25)காற்பந்து,நீச்சல்,கபடி, திடல்தடம், சீருடற்பயிற்சி, பேட்மிண்டன், சதுரங்கம் போன்ற பல போட்டிகளில் சிங்கப்பூர் வீரர்கள் களமிறங்குவதால் இன்னும் பல தங்க வாய்ப்புகள் பெற வாய்ப்புள்ளது.

இந்த போட்டிகளை mewatch தளத்தில் நேரடியாகக் காணலாம்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK