ஈத் அல்- ஃபித்ர் வாழ்த்து தெரிவித்த சிங்கப்பூர் தலைவர்கள்..!!
நம்மிடம் பலரும் கேட்கும் கேள்விகளில் இதுவும் ஒன்று. தமிழ்நாட்டில் ஏஜெண்டுகள் அதிகமான தொகை கேட்பதால் நாம் சிங்கப்பூருக்கு டூரிஸ்ட் விசாவில் சென்று அங்கு வேலை தேடிக் கொள்ளலாமா அல்லது அங்கே இருக்கும் போது வேலை பார்க்கலாமா இதற்கான பதிலை இந்த பதிவில் பார்க்கலாம்.
சிங்கப்பூரை பொறுத்தவரை அதன் சட்ட திட்டங்கள் மிகவும் கடுமையாக இருக்கும். சிங்கப்பூரை நீங்கள் நன்றாக அறிந்து கொள்ள நமது இணைய பக்கத்தை தொடர்ந்து பின்பற்றினாலே போதுமானது.
சிங்கப்பூரில் டூரிஸ்ட் விசா என்பது சிங்கப்பூரை நீங்கள் சுற்றிப் பார்ப்பதற்காக கொடுக்கப்படும் விசா ஆகும். இதன் மூலம் நீங்கள் சிங்கப்பூர் சென்றால் ஒரு மாதம் வரை அங்கு தங்கி சிங்கப்பூரை சுற்றி பார்க்கலாம்.
ஆனால் ஒரு சிலர் இதை தவறாக பயன்படுத்தி அங்கே வேலை தேடுவதும், அங்கேயே வேலை செய்வதும் என்று சட்டத்திற்கு புறம்பாக நடந்து கொள்கின்றனர். இதில் ஒரு சிலர் சிங்கப்பூருக்குள் நுழையும் போதே திருப்பி அனுப்பப்படுகின்றனர்.
சிங்கப்பூரில் வேலை தேடி விட்டு ஒரு சிலர் இந்தியாவிற்கு திரும்பும் போது அவர்களையும் மறுபடியும் சிங்கப்பூருக்குள் நுழைய முடியாதவாறு ப்ளாக் லிஸ்ட் பண்ணி ICA அனுப்பி விடுகிறார்கள்.
அதேபோல் நீங்கள் சிங்கப்பூரில் டூரிஸ்ட் விசாவில் சென்று வேலை செய்து பிடிபட்டால் உங்களுக்கு சிறை தண்டனை கூட கிடைக்க வாய்ப்பு உள்ளது.
சிங்கப்பூர் போன்ற சட்ட திட்டங்கள் கடுமையாக இருக்கும் நாடுகளில் நீங்கள் ஏதேனும் தவறு செய்தால் அது உங்களை பெரிய அளவில் பாதிப்பதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே டூரிஸ்ட் விசாவில் சென்று வேலை தேடுவதோ அல்லது வேலை செய்வதையோ நிறுத்தி விடுங்கள். உங்கள் நண்பர்கள் யாராவது இதுபோன்று செய்தாலோ அல்லது உங்களுக்கு செய்ய சொன்னாலோ செய்ய வேண்டாம் என்று அவர்களுக்கும் அறிவுறுத்துங்கள்.
இது போன்ற சிங்கப்பூரின் சட்ட திட்டங்களை தெரிந்து கொள்ள நமது இணைய பக்கத்தில் தொடர்ந்து இணைந்திருங்கள்.