இந்தியாவில் நடக்கும் திருமணத்தை கண்டு வியந்த சிங்கப்பூர் பெண்..!!
சிங்கப்பூரைச் சேர்ந்த Vlogger ஆக உள்ள Minju என்ற பெண் இந்தியாவிற்கு தன்னுடைய தோழி ஒருவரின் திருமணத்தில் பங்கேற்க சென்றுள்ளார்.
முதல்முறையாக தான் ஒரு இந்திய திருமணத்தை பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் “இந்திய திருமணங்கள் அழகானவை” என்று ஆனந்த கண்ணீருடன் கண்டு ரசித்துள்ளார்.
இந்திய திருமணங்களானது பொதுவாக சொந்தங்கள் படை சூழ ஒரு திருவிழாவைப் போல இந்நிகழ்வானது நடைபெறும். இவை அனைத்தையும் நேரில் சென்று பார்த்த அந்தப் பெண் மெய் மறந்து உள்ளார்.
இந்தியர்கள் பழைய மரபுகளை அவர்கள் தற்போதும் பாரம்பரியத்துடன் பின்பற்றி வருகின்றனர். மேலும் ஒட்டுமொத்த குடும்பமும் அந்த திருமணத்தை முழு மனதுடன் கொண்டாடும் விதத்தில் உள்ளதாகவும் ஒரு உணர்வுபூர்வமானதாக இருந்தது எனக்கு பிடித்துள்ளது என்று ஆனந்த கண்ணீர் வடித்துள்ளார்.