தைவான் மோசடி கும்பலுக்கு உதவிய சிங்கப்பூரைச் சேர்ந்த பெண்..!!

தைவான் மோசடி கும்பலுக்கு உதவிய சிங்கப்பூரைச் சேர்ந்த பெண்..!!

தைவானில் உள்ள பல ஏடிஎம் களிலிருந்து பணத்தை எடுத்த மோசடி கும்பலுக்கு சிங்கப்பூர் பெண் உதவி வந்துள்ளார்.

இந்த ஆண்டு(2025) பிப்ரவரி 21 அன்று தைவானுக்குள் அந்தப் பெண் நுழைந்து பிறகு மோசடி கும்பலின் உறுப்பினர்கள் அவரை யுன்லினில் உள்ள ஹூவே, டைக்ஸி, எர்லின் மற்றும் சாங்குவாவில் உள்ள பெய்டோ போன்ற இடங்களில் உள்ள சுமார் 20 கன்வீனியன்ஸ் கடைகள் மற்றும் வங்கி ஏடிஎம்களுக்கு அழைத்துச் சென்று பணத்தை கொள்ளையடிக்க உதவியுள்ளார்.

தைவானில் உள்ள ஏடிஎம் களிலிருந்து சுமார் NT$1.7 மில்லியன்($70,000) பணத்தை அடித்துள்ளனர்.

இதனை அறிந்த காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியுள்ளனர். மேலும் காவல்துறையினர் விசாரித்த போது யுன்லின் கவுண்டியில் சி ஹூய் டிங் NT$7.46 மில்லியன் (தோராயமாக $310,000) வரை பணத்தை எடுத்து இருக்கக்கூடும் என யுன்லின் காவல்துறையினர் விசாரித்த போது தெரியவந்துள்ளது.

நீதிமன்றத்தில் விசாரித்த போது மேற்கூறிய அனைத்து குற்றங்களையும் ஒப்புக்கொண்டுள்ளனர். தண்டனை வரம்பு மார்ச் 1 முதல் 4 வரையிலான காலத்திற்கு மட்டுமே என்பதால் யூன்லின் மற்றும் சாங்கு வாவில் சுமார் NT$1.7 மில்லியன்($70,000) பணத்தை எடுத்துள்ளதாக கண்டறிந்தது மீதமுள்ள வழக்கு இன்னும் தெளிவுபடுத்தப்படாமல் உள்ளது.

ஜீ ஹூய்டிங் ஏடிஎம்களிலிருந்து 50-க்கும் மேற்பட்ட முறையில் பணத்தை எடுத்தும் தனது மேலதிகாரிகளிடம் பணத்தை ஒப்படைத்ததாகவும் நீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

ஜீ ஹூய்டிங் குற்றங்களை ஒப்புக்கொண்டு உள்ளார் ஆனால் தனக்கு பணம் கிடைக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

சாங்குவா மற்றும் யுன்லின் நீதிமன்றங்கள் அவர் ஒரு வெளிநாட்டவராக இருந்த போதிலும் வெளிப்படையான பதிலை கூறியுள்ளதாக நீதிமன்றத்தில் கூறியுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களில் சிலருடன் ஒரே தீர்வை போல இருந்தாலும் வழக்கின் தீவிரத் தன்மை மோசடி போன்ற குற்றச்சாட்டுகளுக்கு கடுமையான தண்டனையை உத்தரவாதம் செய்தது.

தைவான் நீதிமன்றங்கள் பெண்ணிற்கு 32 ஆண்டுகள் ஆறு மாத சிறை தண்டனை விதித்துள்ளது. தாங்குவா நீதிமன்றம் சிங்கப்பூர் பெண்ணிற்கு ஒரு வருடம் ஆறு மாத சிறை தண்டனையும் NT$30,000 (தோராயமாக $1,267) அபராதமும் விதித்துள்ளது. யுன்லின் நீதிமன்றம் இந்த பெண்ணிற்கு 31 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது (தண்டனைகள் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை).

சிங்கப்பூர் பெண் தண்டனை அனுபவித்த பிறகு அவர் தைவானியில் இருந்து சிங்கப்பூருக்கு அனுப்பப்படுவார்.

இந்த வழக்கு குறித்து மேல்முறையீட்டுக்கு முறையிடப்பட்டுள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK