சிங்கப்பூரின் 2025 குற்றத் தடுப்பு விருது..!!! யாருக்கு..?? எதற்கு..??

சிங்கப்பூரின் 2025 குற்றத் தடுப்பு விருது..!!! யாருக்கு..?? எதற்கு..??

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் யூஓபி வங்கி இந்த ஆண்டுக்கான குற்றத் தடுப்பு விருதைப் பெற்றுள்ளது.

வாடிக்கையாளர்களை மோசடிகளிலிருந்து காப்பாற்றிய சாதனைகளுக்காக இந்த விருது வழங்கப்பட்டது.

வங்கியின் முதன்மை கிளை சேவை மேலாளர் அஸ்லினா அமின், 700,000 வெள்ளி மதிப்புள்ள 5 கிலோ தங்கத்தை மோசடி நபர்களிடம் கொடுக்கவிருந்த வாடிக்கையாளரை தடுத்தார்.

மோசடி நபர்கள் நாணய ஆணைய அதிகாரி என்று கூறி முதலீட்டு வாய்ப்பாக வாடிக்கையாளர்களிடமிருந்து தங்கம் வாங்க முயன்றபோது, அஸ்லினா அதை கவனித்து தடுத்து நிறுத்தினார்.

அஸ்லினா வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கை உடனடியாக முடக்கி, பிற வங்கித் தகவல்களை மோசடியில் பயன்படுத்தும் அபாயத்தைத் தடுப்பதற்கான எச்சரிக்கைகளையும் அளித்தார்.

 

ஆரம்பத்தில் வாடிக்கையாளர் நம்ப மறுத்தாலும்,சில நிமிடங்களுக்கு பிறகு தாம் காப்பாற்றப்பட்டதை உணர்ந்தார்.

மேலும், தியோங் பாரு கிளையில் துணைக் கிளை மேலாளர் ஜெசிக்கா லீ, 15,000 வெள்ளிக்கும் மேல் சேமிப்பை இழக்கவிருந்த பெண்ணை மோசடியில் இருந்து காப்பாற்றினார்.

இதன் மூலம் யூஓபி வங்கி வாடிக்கையாளர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுத்து, குற்றத் தடுப்பில் முன்மாதிரியாக செயல்பட்டது வெளிப்படுகிறது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK