மலேசியாவின் 68வது சுதந்திர தினத்தில் சிங்கப்பூரின் இனிய வாழ்த்து...!!
சிங்கப்பூர்: மலேசியாவின் 68வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஜோகூர் பாருவில் உள்ள எல்லைப் பாதுகாப்புத் துறை (AKPS) மற்றும் சுல்தான் இஸ்கந்தர் கட்டிடச் சோதனைச் சாவடி அதிகாரிகளுக்கு, அவர்களின் நெருக்கமான கூட்டுறவு மற்றும் வலுவான பங்குதாரத்திற்காக நன்றி தெரிவிக்கும் வகையில் குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) தேசிய தின கேக்குகள் மற்றும் கப்கேக்குகளை வழங்கியது.
மலேசியாவின் 68வது பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்த ICA, நேற்று (30.08.25) தனது பேஸ்புக் பக்கத்தில் வாழ்த்து பதிவையும் வெளியிட்டது.
எல்லைப் பாதுகாப்பை மேம்படுத்தவும், சுமூகமான வர்த்தகம் மற்றும் பணியாளர் அனுமதியை உறுதி செய்யவும், மலேசியாவுடன் தொடர்ந்து ஒத்துழைக்க ICA அதிகாரிகள் எதிர்நோக்குவதாகவும் அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளது.