அதிர்ச்சி..!!சிங்கப்பூரின் பழமையான கோவிலில் திருடப்பட்ட சிலை..!!
சிங்கப்பூர்: சிங்கப்பூர் ரோச்சோர் பகுதியில் உள்ள துவா பெக் காங் கோயிலில் வைக்கப்பட்டிருந்த புலி கடவுள் சிலை (06.12.2025) திருடப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக கோயில் நிர்வாகம் CCTV காட்சிகளை ஆய்வு செய்ததில், சிலையை திருடுவதற்காக பலிபீடத்தின் அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் ஒருவர் சுற்றித் திரிந்ததை பதிவு செய்தது.
கோயிலின் மக்கள் தொடர்பு மேலாளர் வென் யிக்சியோங் கூறியபடி, சம்பந்தப்பட்ட நபர் சிலையை உடனடியாக திருப்பித் தர வேண்டும்.இல்லையெனில் சம்பந்தப்பட்ட நபர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.
மேலும் இச்சம்பவம் தொடர்பான CCTV வீடியோக்களை வெளியிட்டு, தெரிந்தவர்கள் அதனைச் சம்பந்தப்பட்ட நபரிடம் தெரிவித்து உடனடியாக கோயிலுக்கு திருப்பி தருமாறு கேட்டுக் கொண்டார்.
ரோச்சோர் துவா பெக் காங் கோயில் 1847 ஆம் ஆண்டு கட்டப்பட்டதுடன், சிங்கப்பூரின் பழமையான துவா பெக் காங் கோயில்களில் ஒன்றாகும். வென் யிக்சியோங் மேலும், அந்த குறிப்பிடத்தக்க புலிக் கடவுள் சிலை கோயிலில் மிகவும் மதிக்கப்படும் தெய்வமாக இருப்பதை நினைவூட்டினார்.
“சிலையை விற்பவர் அல்லது வாங்குபவர் சட்டத்தை மட்டுமல்ல, தெய்வத்தைவும் அவமதிப்பதாக குறிப்பிட்டார்.அதனால் சிறந்த கர்மாவிற்காக சிலையை உரிமையாளரிடம் திருப்பி தர வேண்டும்” என்று அவர் கூறினார்.