இனி புகைபிடிக்கும் பழக்கத்துக்கு கடும் கட்டுப்பாடு..!!அமலுக்கு வந்த புதிய வரி உயர்வு..!!!
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் நேற்று (12.02.26) வெளியிடப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில், புகையிலைப் பொருள்களுக்கான வரி 20% ஆக உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உயர்வு, நாட்டில் தயாரிக்கப்படும் புகையிலைப் பொருள்களுக்கும், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து வகை புகையிலைப் பொருள்களுக்கும் சமமாகப் பொருந்தும் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வரி உயர்வின் காரணமாக சிகரெட் உள்ளிட்ட பொருட்களின் சில்லறை விலைகளில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கணக்கீட்டின்படி, ஒரு சிகரெட்டின் விலை சுமார் 10 காசு வரை அதிகரிக்கலாம். அதேபோல், சுருட்டுகளின் விலையிலும் இணையான உயர்வு அமலாகும்.
மேலும், புகையற்ற புகையிலைப் பொருட்களுக்கும் குறிப்பிடத்தக்க விலை உயர்வு இருக்கும். இதன்படி, 1 கிலோ புகையற்ற புகையிலைப் பொருளின் விலை S$378 இலிருந்து S$454 ஆக உயரவுள்ளது.
புகையிலைப் பொருள்களுக்கான வரி கடைசியாக 2018ஆம் ஆண்டு 10% ஆகவும் 2023ஆம் ஆண்டு 15% ஆகவும் உயர்த்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் அதிகரிக்கப்பட்ட இந்த வரி உயர்வுகள், புகைபிடிக்கும் பழக்கத்தை குறைப்பதற்கும், பொதுச் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கும் உதவும் என்ற நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.